முன்னுரை
 

அன்பர்களே ! இச் செய்யுளருமையை ஈண்டுச் சிறிது நினையாமல் அப்புறம் அகல்வதோ ! முல்லைநிலம் என்ற நினைவு முகிழ்த்தவுடன் வேளிர் திருவுள்ளத்தே அதனை வளம்படுத்தும் கார்கால நினைவும் ஒருங்கே முகிழ்க்கின்றது. மழைபெய்தலை யாரே உவவார்! எனவே ''முற்றுநீர் வையகம் முழுவதும் உவப்பக் கருவி மாமழை'' தனக்குரிய பருவமொடெதிரப் ''பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து'' வருகின்றது மழை கடவுட்டன்மையுடையது: மழையே கடவுள் என்பது தமிழர்
கொள்கை. கடவுள் வாழ்த்தோடு வான்சிறப்பை அடுத்தோதிய வள்ளுவர் கருத்தும் இஃதேயாகும். அம்மழை வரும் அழகையும் ஆர வாரத்தையும் காண்க.

 

இனி இம்முகில்கள் முழக்கத்தோடே இப்புலவர் அகச்செவியின்கண் அந்நிலத்தே பொருள்வயிற் பிரிந்த தலைவர் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் கற்புடை மாதரின் நெஞ்சக் குமுறல் நன்கு கேட்கின்றது. ஆதலால் அம்முகிலின் குமுறலுக்கு அத்தமிழ் மகளிரின் நெஞ்சக்
குமுறலே சிறந்த உவமையாகும் எனக் கண்டு ''கற்புடை மாதரிற் கதுமென உரறி'' என்று நுண்ணிதில் ஓதுவாராயினர்.


    முல்லைநிலத்து மகளிர் பொருள்வயிற் பிரிந்த தம் கணவரை எதிர்பார்த்துப் பிரிவுத் துன்பத்தைத் தாங்கி ஒருவாறு ஆற்றியிருக்கின்றனர் என்னும் இத்தமிழ்ச் செய்தியோடு இப்புலவர் நெஞ்சத்தே தோன்றும் மற்றொரு வியத்தகு நினைவினைக் காணுங்கள். முல்லைநிலமே ஒரு தலைவியாவாளாம்; அவள் தலைவன் கார்காலம் என்பவனாம்; அவனும் உலகத்தே அறம் பொருள் இன்பம் சிறப்புற நிகழ்த்தற் பொருட்டுத் திரைகடலோடியும் திரவியந் தேடச் சென்றிருந்தானும் ; மானிடத் தலைவர்கட்குச் சென்றோர் முகப்பப் வேண்டும் பொருள் கிடவா தாயினும் இத் தெய்வத்
தலைவனுக்கோ வேண்டும் பொருள் யரண்டும் முகப்பக் கிடத்தலிற் ''பரவைப் பௌவம் பருகு நிமிர்ந்து'' தன் காதலியை நினைந்து விரைந்து வருகின்றானாம். பொருள் உடையார்க்கு எல்லாம் எளிதே கை கூடுதல் இயல்பேயன்றோ? தன் பிரிவாகிய வேனில் வெப்பத்தாலே தன் கிழத்தி
மேனி வாடிக் கிடக்கின்றாள் ; ஆதலின் தன் முகிலாலே உலகமெல்லாம் ஒரு பந்தரிட்டான்; அப் பந்தரின்கண் வானவில்லாகிய ஒரு பூமாலையை அழகுற நாற்றினான் ; மின்னலாகிய விளக்குகளை எங்கும் மாட்டினான் (மின்சாரத்தால் இப்புலவர் பெருமான் உலகமெல்லாம் விளக்கேற்றினார்
என்பதனை நினைந்து மகிழ்க) ஆவி வெண்மழையாகிய பொருளாலே
தன் கிழத்தியை மண்ணு நீராட்டினானாம்.