கம்பன் அறநெறிச்
செம்மல் திருமிகு ஜி.கே. சுந்தரம் அவர்களைத்
தலைவராகக் கொண்ட கம்பன்
டிரஸ்டின் அறங்காவலர்களுக்கும்,
இந்தத் திருப்பணிக்கென
உருவாகிய நிர்வாகக்குழு, நிதிக்குழு,
உரையாசிரியர் குழு ஆகிய மூன்று குழுக்களின்
உறுப்பினர்களுக்கும்
மிகுந்த பணிவோடு என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன், என்
முதுமைப் பருவத்தையும்
அதற்கேயுரிய அசதி மறதிகளையும்
பொருட்படுத்தாமல் முழு நம்பிக்கையோடு
பொறுப்பை ஒப்படைத்த
அந்தப் பெருமக்களைப் பாராட்டிப் போற்றி
வணங்குகிறேன். கம்பன்
அறநெறிச் செம்மல் திரு. ஜி.கே. சுந்தரம்,
தானசூர - ஜகந்நாதப்ரேமி
திரு. ஆர். துரைசாமி நாயுடு,
சேவாரத்ன டாக்டர் திரு. ஆர்.
வேங்கடேசலு, சிந்தனைச் செல்வர் திரு.
கிருஷ்ணராஜ், வாணவராயர்,
நல்லாசிரியர் திரு. இ.
வேங்கடேசலு மற்றும் சான்றோர்கள்
தமிழ்
இலக்கிய வரலாற்றிலே
இத்திருப்பணி
வாயிலாக இடம்
பெற்றுவிட்டனர்
என்பதில் ஐயமில்லை. சங்கம்
நிறுவி வளர்த்த
பாண்டிய மன்னர் தொடங்கி, நெருப்புக்கும்
நீருக்கும் கரையானுக்கும்
இரையாகிக் கொண்டிருந்த ஏடுகளை நம்
கைப்பொருளாக்கி மறையாமல்
காத்த டாக்டர் உ.வே.சா. வரையில்
அமையும் சரித்திர நாயகர்களின்
வரிசையிலே இவர்களும் சேர்கிறார்கள்.
|