முகப்பு
 
தொடக்கம்

iv

யுடையவனாய்த் தமோமயராக்ஷஸனைச் சிதறவடித்துக் கதிரவ னானவன்
பீமஸேநன்போன்று பிரதையின்மக்களுடைய மனத்தைத் தாமரைகள் போல
மலர்த்தியவண்ணம் தோன்றினான்]” என்று கூறியிருப்பதை, வில்லிபுத்தூரார்
“பெருந்திறனிசாசரப்பிணத்தை யவ்வனத், திருந்துளபறவைகட்
கிருள்செய்கங்குலின், விருந்திடக் கொளுத்திய விளக்கெனும்படி, யருந்திசை
பொலிவுற வருக்கன் றோன்றினான்”,”கரங்களானிசாசரவிருளைக்காய்ந்துகொண்,
டிரங்கி நீள் வனத்திடையிரவின்மாழ்கிய, வரங்கொடாமரை  முகமலர்த்து
நீர்மையால், உரங்கொள் வீமனுக்கெதிருதயபானுவே” என்று பின்னுஞ்சிறப்புறக்
கூறியிருப்பதும்; காண்டவவனத்தை அக்கினி பகவான் எரிக்க மேகம்
மழைபொழிந்ததைக் கூறுமிடத்து “உபரிஜ்வலநஸ்யத்ருச்ய மாநா:
ஹ்ருஷிதைராவத ஹஸ்ததண்ட தைர்க்யா: விததுர் ஜகதண்ட மண்டபஸ்ய -
ஸ்படிக ஸ்தம்பதியம் கநாம்பு தாரா: [ஐராவதயானையின் துதிக்கைபோல்
நீண்டனவாய் அக்கினிக்கு மேலே காணப்படுவனவான மேகதாரைகள்
ஜகதண்டமாகிய மண்டபத்தின் ஸ்படிகஸ்தம்பமென்ற எண்ணத்தை யுண்டாக்கின]
என்று கூறியிருப்பதை “மண்டிமீ தெழுந்த வன்னியின்சிகைக
ளிந்திரன்மதலைவாளிகளாற், கண்ட கூட்டத்திற்கமைத்த செம்பவளக்
காண்டகுதூண்டிரள் காட்ட, அண்டகூட்டத்திற் கிந்திரன் பளிங்காலமைத்த
பல்லாயிரகோடி, சண்டதூணங்கள் போன்றன பரந்து தனித்தனி முகில்பொழி
தாரை” என்று பின்னும் நலமுறக்கூறியிருப்பதுங் காண்க. இரண்டாவது -
வைஷ்ணவராயிருக்கிற இந்த வில்லிபுத்தூரார் “ப்ரணாமலக்நேநலலாடபஸ்மநா -
ப்ருசம் பவித்ரீக்ருதபாதபங்கஜா” என்று அகஸ்தியபட்டர் கூறியதை யொட்டி
“தொழுது நெற்றியில் விபூதி யாலன்னை தன் துணையடித் துகணீக்கி” என்று
வியாசமுனிவரை நெற்றியில் விபூதியணிந்திருப்பவராகத் கூறியது. மூன்றாவது -
கி.பி. 1232 - 1323 இல் தெலுங்குதேசத்தில் அரசாண்ட காகதீயபிரதாப
ருத்திரனுடைய காலத்திலிருந்தவர் பாலபாரதத்தின் நூலாசிரியராகிய
அகஸ்தியபட்டரென்று ஆராய்ச்சியாளர் அகஸ்தியகவியின் காலத்தை
நிர்ணயித்திருப்பது: இது நிற்க.

     சுருக்கமுறப் பாரதகதையைக் கூறவேணுமென்றுகருதி முதலிற்
பாலபாரதத்தையொட்டிப் பாடிய வில்லிபுத்தூரார் சில விடத்து
வியாசபாரதத்தையே யொட்டியும் கூறியுள்ளார்: என்றாலும், சிலவிடத்து
வியாசபாரதம் பாலபாரதம் என்ற இரண்டிலும் ஒற்றுமைப்பட்டுள்ளவற்றை
வேறுபடுத்தியுங் கூறியுள்ளார்: இவ்விஷயம் பலவும் உரையில் ஆங்காங்குக்
காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு இருப்பதனால்தான் வில்லிபுத்தூரார், தமதுநூலுக்கு
வியாசபாரதமே முதனூலென்று கூறியுள்ளார். அது தக்கதே யாகும்.

     இந்நூலைப்பாலபாரதத்தோடுவைத்து ஒற்றுமை வேற்றுமைகளைக்
கவனிக்குமாறு அந்நூலின் பிரதியைத் தமது நண்பரிடத்தினின்றுவாங்கி
உதவியதுமன்றி, அந்நூற்பொருளை உடனிருந்து ஆராய்ந்தும் உதவிய
ஸ்ரீ. உ. வே. H. சேஷய்யங்கார் (ரிடைர்ட் மதறாஸ் யூனிவர்ஸிடி, கன்னட
அஸிஸ்டெண்ட் லெக்சரர்) ஸ்வாமி


முன் பக்கம்