முகப்பு
 
தொடக்கம்

v

விஷயத்தில் நன்றியறிதலோடு என் பணிவைக் காட்டுவதன்றி வேறு
கைம்மாறிலேன்.

இந்நூலை 18-யாண்டுகட்குமுன் முதன்முறை அச்சிடும்போது ஒத்துப்
பார்த்தல் முதலிய உதவிகள் புரிந்த விவேகாநந்தா கல்லூரித் தமிழ்
விரிவுரையாளர் ஸ்ரீமான். கொ. ஜகந்நாதாசார்யர்,M.A.L.T., அவர்கட்குச்
செந்தமிழ்ச்செல்வமும் பல்வகைநலனும் பெருகுமாறு திருமால் அருள்புரிவாராக.

அச்சகத்தாருடைய அக்கறையின்மையென்ன அசாக்கிரதை யென்ன
இவைகளாலும் என்னுடைய சோர்வாலும் பல பிழைகள் ஏற்பட்டமைக்கு மிகவும்
வருந்துகிறேன். புள்ளியிடாமை அரைப்புள்ளி கோடிடல் முதலிய விடுபடுகை
மாறுபடுவது என்றாற் போன்ற சிறு சிறு பிழைகளை வாசகர்களே எளிதிற்
கண்டுபிடிக்க இயலுமென்ற காரணம்பற்றி அவைகளைப்பிழைத்திருத்தத்திற்
காட்டவில்லை: முக்கியமான பல பிழைகள் பிழைத்திருத்தத்திற்
காட்டப்பட்டுள்ளன. அவைகளை வாசகர்கள் முதன்முதலில் திருத்தி
யமைத்துக் கொள்ளின் நலமாம்.

இதிலுள்ள குற்றங்குறைகளை அறிஞர் தமது நற்பண்பினாற் பொறுப்பது
மன்றி, எனக்கும் அறிவுறுத்துவராயின் அன்னாரிடத்து நன்றியறிதலோடு
உரியகாலத்து அவற்றை வெளிப்படுத்துவேன்.

திருமகள்கொழுநனான திருமால் தனது சரிதையாகிய இந்நூலில்
அடியேனுக்கு மனம்பதியுமாறுசெய்து இந்நூலின் ஆதி பருவத்திற்கு
உரைவெளியிடுதலாகிய இந்தப்பணிக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவிய
கருணைத் திறத்திலீடுபட்டு அனவரதமும் அப்பரமனை வாழ்த்துகின்றேன்.

ஜய வருடம்

இங்ஙனம்

வைகாசி மாதம் வை. மு. கோபாலக்ருஷ்ணமாசார்யன்.

நான்காம் பதிப்பு:- இந்தப் பதிப்பு மூன்றாம் பதிப்பை யொட்டியே
அமைந்துள்ளது. எனினும், ஒரோவிடங்களில் சில அரிய விடயங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப்பதிப்பு அச்சாகுங்கால் அச்சுத்தாளைத்திருத்தல்,
அரியவிடயம் சேர்த்தல் முதலிய வகையால் பெரிதும் உதவியவர் -
விவேகாநந்தர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் C. ஜகந்நாதாசார்யர் எம். ஏ. எல்.
டி.; இவருடன் துணை புரிந்தவர் - ஈகை. ஸ்ரீ. E. S.  வரதாசார்யர் பி. ஏ.,
என்பவர். இவ்விருவர்திறத்தும் நன்றியறிதலுடையேன்.

சோபகிருது வருடம்  இங்ஙனம்
ஐப்பசி மாதம்  வை. மு. நரசிம்மன்.


முன் பக்கம்