viii
ஒவ்வோரிடத்திற் சந்தர்ப்பத்துக்கேற்பச்
சிறப்பித்துக் கூறியிருத்தல்போலவே,
இவரும் தமது நூலில் சூரியன் அக்கினி யமன் முதலிய மற்றைத்தேவர்களையும்
சமயம்வந்தவிடத்துப் பக்ஷபாதமில்லாமற் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார்.
தம்மையாதரித்த வக்கபாகைவரபதியாட்கொண்டானை ஆங்காங்கு உபமான
முகத்தாற் சிறப்பித்துக்கூறியுள்ளார். அங்ஙன் கூறுவதை இந்த ஆதி பருவத்தில்
காண்டவதகனசருக்கத்தில் 69 - ஆம் பாடலிலுங் காணலாம்.
கடைச்சங்கப்புலவர்களுள்
ஒருவராகிய பெருந்தேவனாரென்பவர்
பாரதம்பாடியுள்ளார். அந்நூலுள் பழைய உரைகளிற் கிடைக்கின்ற
சிலபாடல்களன்றி, மற்றையவை காணப்படவில்லை. பிறகு ஒன்பதாம்நூற்றாண்டில்
மூன்றாம் நந்திவர்மன்காலத்திருந்தவராய்ப் பெருந்தேவனாரென்று
பெயர்வழங்கப்பெற்ற ஒருவர் மகாபாரதத்தைத் தமிழில் வசனமும் பாடலுமாக
விரவிவருகிற ‘சம்பு’ என்கிற நடையிலே பாடியிருக்கின்றனர்; பெரும்பாலும்
வெண்பாக்களால் அமைந்ததுபற்றி, அந்நூலுக்குப்பாரதவெண்பாவென்று பெயர்.
அதிற் சில பகுதிகளே இப்போது கிடைக்கின்றன. 13- ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் அரும்பாக்கத்து அருணிலை விசாகன் பாரதத்தை
இனியசெந்தமிழ்ப் படுத்தினான் என்று திருவாலங்காட்டுச்சாசனம் கூறும்;
இந்நூல் வழக்குவீழ்ந்தது
போலும்.
இப்பாரதத்துக்கும்
இதன்முதனூலாகிய வியாசபாரதத்துக்கும் இடையிடையே
கதையமைதிகள் சிற்சில வேறுபடுவது “முன்னோர் நூலின் முடி பொருங்கொத்துப்,
பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி, அழியாமரபினது வழிநூலாகும்” என்ற
வழிநூலிலக்கண விதிப்படி இவ்வாசிரியராற் பிறநூல் மேற்கோள்கொண்டு
அமைக்கப்பட்டதாதல்வேண்டுமென அறிக.
வில்லிபுத்தூரார்
தமது பாரதத்திற் பாடியது, முதற்பத்துப் பருவமே;
மற்றை யெட்டுப்பருவங்கள் அவராற் பாடப்படவில்லை. அதற்குக் காரணம்:-
நூல் முழுவதையும் பாடினால், பாண்டவர்கள் கிருஷ்ணபகவான் என்கிற
மகாபுருஷர்களது மரணசரித்திரத்தைத் தம்வாயாற் சொல்லவேண்டுமே யென்று
கருதி, “கனை கடற்பா ரளித்து அவரு மந்நகரி லறநெறியே கருதிவாழ்ந்தார்”
என மங்களகரமாகச் சரித்திரத்தைப் பாடிமுடித்தனரெனக்கொள்வது
தகுதியுடையது. பாண்டவசரித்திரங் கூறுகிற பாரதசம்பு முதலிய சில
நூல்களிலும் பின்னிட்ட கதை காணப்படவில்லை. (கம்பர் இராமயணத்தில்
உத்தரகாண்டம்பாடாமல் விட்டதற்கும் இப்படிப்பட்ட காரணமே முக்கியமாகும்.)
இனி, இந்நூலின் பின்னைய ‘பருவங்களும் இவராற் பாடப்பட்டுப் பிற்காலத்திற்
கிடைத்தற்கு அரியவையாயின என்று கொள்வாரு முளர். “ கலியுகவியாதன்
சொல்லக் கணபதி யெழுதுபாடல், பொலிவுறு தமிழிலாறாயிரமென விருத்தம்
போற்றிச், சலிவற வில்லிபுத்தூரிறைவனாஞ்சார்வபௌம,
னொலிகெழுமறையோர்கோமா னுயர்ந்தவரு
|