iv
| இப்பதிப்பினைச்செம்மையுற ஆக்கி, மேற்குறித்தவை
அனைத்தையும் எழுதிச்சேர்த்துத் தம் பேருழைப்பினை நல்கியவர் சென்னைவிவேகாநந்தர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் வித்வான் C. ஜெகந்நாதாசார்யர், M.A.L.T. Dip. Geog.
என்பவர். இவர் என் தந்தையாரின் தலைமாணாக்கர். இவருடன் உதவி புரிந்தவர் ஈகை. ஸ்ரீ. E. S. வரதாசார்யர்,B.A.; இவ்விருவர் திறத்தும் நன்றியறிதலுடையேன்.
| திருமகள்கொழுநனான திருமால்தனது சரிதையாகிய இப்பாரதத்தில் அடியேனுக்கு மனம்பதியுமாறு செய்து இந்நூலின் சபாபருவத்திற்கு நல்லுரை வெளியிடுதலாகிய இந்தப்பணிக்குத் தோன்றாத்துணையாய் நின்று உதவிய கருணைத்திறத்திலீடுபட்டு அனவரதமும் அப்பரமனை வழுத்துகின்றேன்.
|
கீலகவரு
வைகாசி மீ |
இங்ஙனம்,
வை. மு. நரசிம்மன். |
|