முகவுரை.

அருந்தமிழபிமானிகட்கு ஓர் விண்ணப்பம்.

கம்பராமாயணம் முழுவதற்கும் அடியேன் உரைகண்டு வெளியிட்டபின், வில்லிபுத்தூரார்பாரதம் முழுவதுக்கும் உரை காண வேணுமென்று பலர் விரும்பியது உண்டு.

எமது ஆசிரியரான ஸ்ரீமாந் வை. மு. சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீமாந் சே. க்ருஷ்ணமாசார்யஸ்வாமிகள் உடனிருக்க இந்தவில்லிபாரதத்திற் பெரும்பாலான பகுதிகட்கு முந்துறவே உரைகண்டுள்ளனர். அந்தஸ்வாமிகள் உரையெழுதாது விட்ட பகுதி, மிகவுஞ் சொற்பம். அங்ஙன்சொற்பப்பகுதி, உரையெழுதாது விடுபட்டதற்குக் காரணம், அப்பகுதி சென்னைப் பல்கலைக்கழகத்தாராற் பாடம்வைக்கப் படாமையே யாகும்.

அங்ஙன் உரைகண்டவற்றுள் அவர்கள்முழுதும் உரைகண்ட பருவங்கள், உத்தியோக வீட்டும துரோணகன்ன சல்லிய சௌப்திக பருவங்களாகும்.  அன்னவர்காலத்திலேயே ஸ்ரீமான் சே. கிருஷ்ணமாசார்யஸ்வாமிகளின் உதவியினால் சபாபருவம் முழுவதுக்கும் யான் உரையெழுத, ஸ்ரீமான்-வை. மு. சடகோபராமாநுஜாசார்யஸ்வாமிகளால் பார்வையிடப்பட்டு, அந்தப் பகுதி, முன்னரே வெளியிடப்பட்டது.

உத்தியோகசல்லியசௌப்திகபருவங்கள் முன்பு அச்சிட்டவை அரியனவாய்விட்டதனால், அவற்றை ஸ்ரீமான் சே. கிருஷ்ணமாசார்ய ஸ்வாமிகளின் குமாரர் ஸ்ரீமான்-சே. பார்த்தசாரதியையங்கார்ஸ்வாமி வெளியிட்டனர்.  பின்னர் வீட்டுமாதிபருவங்களும் உரையுடனுள்ளவை கிடைப்பது அரியனவாக, அவற்றைமுன்னிலுஞ் சிறிதுதிருத்தம் பெற அச்சிட்டேன். (அவை இப்போது அரியன ஆகையால் மீண்டும் அச்சிட இறைவனருளை யெதிர்பார்த்திருக்கிறேன்.)

அப்போது ஆதிபருவம் ஆரணியபருவம் விராடபருவம் என்ற மற்றையமூன்று பருவங்கள் முற்றிலும் உரையெழுதப்பெறாமல் இருந்தன. அவற்றுள் உரையில்லாப்பகுதிகட்கு உரையெழுதிச் சேர்த்து ஏறக்குறைய இருபது யாண்டுகட்கு முன் வெளியிட்டேன், அவையாவும் இபோது அரியனவாகி விட்டதனால் மீண்டும் பதிப்பிக்கத் தொடங்கி, விராடபருவம் ஆதிபருவம் அச்சிட்டபின் ஆரணிய பருவம் அச்சிடலாயிற்று.

இந்த ஆரணிய பருவம் பருவத்தில், (1) அருச்சுனன் தவநிலை,  (2) நிவாதகவசர்காலகேயர்வதை, (3) புட்பயாத்திரை, (4) சடாசுரன் வதை,