முகவுரை. அருந்தமிழறிஞர்காள்! ஸ்ரீராமாயணத்திற்சுந்தரகாண்டம்போல ஸ்ரீமகாபாரதத்தில் மேம்படப்பாராட்டப்படுவது, விராடபருவமே யாகும்; வானம்மழை பெய்யாது வறந்தகாலத்தில் இதனைப் பக்திசிரத்தைகொண்டு நியமத்துடன் ஒரேநாளிற் பாராயணஞ்செய்வாராயின்,நாடு மழை பெய்து வளஞ்சிறக்கு மென்பது, பெரியோர்துணிபு. இத்துணைப்பெருமைவாய்ந்தவிராடபருவத்தில் நிரைமீட்சிச் சருக்கந் தவிர, மற்றைப்பகுதிகள் சென்னை யூனிவர்ஸிடியாராற் பாடமாக வைக்கப் படாமையால், எனக்கு ஆசிரியன்மாரான ஸ்ரீமாந் வை. மு. சடகோபராமாநு ஜாசார்யஸ்வாமிகளாலும்,ஸ்ரீமாந் சே. கிருஷ்ணமா சார்ய ஸ்வாமிகளாலும்அந்த மற்றைச் சருக்கங்கட்கு உரைகாண வாய்க்கவில்லை. விராடபருவந் தவிர, மற்றைப்பருவங்களெல்லாம் உரையுடன் முற்றுப்பெற்றபிறகு இதுஒன்றுமாத்திரம்உரையில்லாதிருக்குங்குறையைப் போக்கவேணுமென்ற எண்ணம் கடவுள்செயலால் என்மனத்தி லுதிக்க, இந்தப்பருவத்திலுள்ளமற்றைச்சருக்கங்கட்கெல்லாம் உரைகண்டு இந்தவிராடபருவத்தையும் முற்றுவித்தேன்; நிற்க. இந்தவில்லிபாரதத்துக்குமுதனூலாகிய ஸ்ரீவியாசபாரதத்துள் இந்தவிராட பருவத்தில் (1) பாண்டவப்ரவேஸபர்வம், (2) ஸமய பாலநபர்வம்,(3) கீசகவத பர்வம், (4) கோக்ரஹணபர்வம், (5) வைவாஹிக பர்வம் என்று ஐந்து உபபர் வங்களேயுள்ளன; அவைகளே, வில்லிபாரதத்தில் (1) நாடுகரந்துறைசருக்கம், (2) மற்போர்ச்சருக்கம்,(3) கீசகன்வதைச்சருக்கம், (4) நிரைமீட்சிச் சருக்கம், (5)வெளிப்பாட்டுச் சருக்கம் என்றபெயர்கொண்டு நிற்கின்றன: பெயர்மாத்திரத்தைக் கருதுமிடத்து இரண்டற்குஞ் சிறிதுவேறுபாடு தோன்றினும், உள்ளுறையைக் கருதுமிடத்துஇரண்டிலும் கூறப்படும் முக்கியமான சரிதைகள், ஒற்றுமைப்பட்டேயுள்ளன. இவ்வொற்றுமைப்பாடு ஒன்றும்வில்லிபாரதத்துக்கு முதனூல் வியாசபாரத மென்பதை வற்புறுத்தும். சிலர்கருதுவதுபோலஅகஸ்த்யபட்டர்எழுதிய பாலபாரதமே இந்தவில்லிபாரதத்துக்கு முதனூல் என்னலாகாதோவெனில்,-அந்தப்பாலபாரதத்தில்மாமல்லனை வீமன் வென்ற செய்தியே கூறப்பட்டிலது. மற்றும், திரௌபதியைக் கீசகன் பற்றும்போதுசூரியனாலேவப்பெற்ற ஒருகிங்கரன் கீசகனை அப்பாற்றள்ளி அவளை மீட்ட அற்புதச்செய்தியும் காணப்பட்டிலது; இவ்வாறு எவ்வளவோ வேறுபாடுகள் இதற்கும் அதற்கும் உள்ளன; வில்லிபாரதத்துக்கும்
|