வியாசபாரதத்துக்கும்உள்ள சிறுசிறு வேறுபாடுகள் உரையினுள் ஆங்காங்குக் காட்டப்படும். இந்தஉரையிலுள்ளகுற்றங்குறைகளைக் கண்டறியும் பெரியோர் தமது இயற்கைநற்குணத்தாற் பொறுப்பதன்றி எனக்கும் அறிவுறுத்துவராயின்,அப்பிழைகளைத் திருத்திக்கொண்டு சமயம் வாய்க்கும்போது பலர்க்கும் அறிவிப்பேன். இந்தவிராடபருவத்தில்நிரைமீட்சிச்சருக்கத்துக்கு என்னாசிரியன்மார் கண்ட உரை முன்னமே என்னால் அச்சிடப்பட்டு உள்ளதனால்,மற்றைப்பகுதிகளே உரையெழுதி முதற்பதிப்பில் அச்சிடப்பட்டன: இந்தப்பணியை நான் செய்யுமிடத்துஉடனிருந்து உதவியவர், யான் அச்சிட்ட வேறுபருவங்கட்கு உடனிருந்து உதவியவரான கொ. ஜகந்நாதாசார்யர், M.A. என்பவர் ஆவர்: அன்னார்க்குத்திருமகள் கொழுநன் பலநலங்களையும் பல்குவிப்பானாக: இந்த இரண்டாம் பதிப்பு, விசேடமான மாறுபடுதலில்லாமல்அச்சிடப்பட்டது. வில்லிபாரதம் முழுவதுக்கும் உரைகண்டுவெளியிடுதலாகிய இந்தப்பணியில் சிற்றறிவினனான எனக்குத்தோன்றாத்துணையாய் நின்றுஉதவி இடையூறின்றி இனிது முற்றுப்பெறத் திருவருள் புரிந்த திருமாலின்திருவடிகளைத் திரிகரணங்களாலும் எஞ்ஞான்றும் போற்றுவேன்.
மன்மதவருடம் ஐப்பசிமாதம் 12தேதி
|
இங்ஙனம்
வை. மு .கோபாலகிருஷ்ணமாசார்யன். |
மூன்றாம் பதிப்பு
|