- 33 -

சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்

25. உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்
  அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை
  யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்
  துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.

(இ-ள்.) உளம்கொள - மனம் ஒருப்படுமாறு, மலிந்த- நிறைந்த, கொள்கை - நல்லொழுக்கங்களையுடைய, உபாசகர் குழுவி்னுள்ளார் - சிராவகர் கூட்டத்திலுள்ளவர்களாகி, அளந்து அறிவு அரிய கேள்வி-ஞானத்தாலளவிடு தற்கரிய  கல்வி கேள்விகளையுடைய, அபயமுன் உருசி-அபயருசியும், தங்கை - (அவன்) தங்கையாகிய, இளம்பிறை அனைய நீராள் - இளம்பிறையையொத்த இயல்பினையுடையளான, அபயமாமதி யென்பாளும்-அபயமதியென்பவளும் (ஆகிய இருவரும்), துளங்கிய மெய்யர் - தளர்ந்துவாடிய மேனியை யுடையராயினும், உள்ளம் துளங்கலர் - மனம்தளராதவராகி, தொழுது நின்றார் -சுதத்தாசாரியரை வணங்கி நின்றனர்.(எ-று.)

இளைஞர் இருவரும், வழிநடந்த இளைப்பினால் மேனி வாடினும் மனஞ்சலியாதவராகிச் சென்று தமதுகுருவை வணங்கின ரென்க.

உடல் மனம் முதலியவற்றின் சக்திக்குத் தக்கவாறு தவம் தியானம் முதலியவற்றைக் கைக்கொள்வது முறைமையாதலால், அவ்வாறு விரதம் முதலியன ஏற்றுக்கொண்டுள்ள உபாசகரை, ‘உளங்கொளமலிந்த கொள்கை உபாசகர் குழுவினுள்ளார்‘ என்றார்.  சாஸ்திரக்கலைகள் நிரம்பிய அபயருசியைப் போல, அபயமதி அத்துணைத் கலைகளில் நிரம்பாதவ ளென்பார், ‘ இளம்பிறையனைய நீராள்என்றார்; கலைகளில் பயில்கின்றாள் என்க.  அபயருசி கலைகளில் நிரம்பினானென்பதனை, (யசோ.31.ல்) முழுமதியை உவமையாக்குவதனா லறியலாகும்.  அபயமாமதி யென்பதிலுள்ள ‘மா‘,