அசை; ‘அனங்கமாவிணை*’ என்றார்போல, துளங்கல்-சலனமுறல். மெய்-உடல்.
பொய்யானவுடலை ‘மெய்‘ என்று கூறியது மங்கலவழக்கு. (21)
சுதத்தாசாரியர்
கருணையால் இளைஞரைச்
சரியை
செல்லப் பணித்தல்
26. |
அம்முனி யவர்க டம்மை யருளிய
மனத்த னாகி |
|
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் |
|
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர்
சரியை போகி |
|
நம்மிடை வருக வென்ன நற்றவற்
றொழுது1 சென்றார். |
(இ-ள்.)
அமுனி-அந்தச் சுதத்தாசாரியர், அவர்கள் தம்மை -(வணங்கிய)அவ்விருவரையும், அருளியமனத்தனாகி
- அருள்புரிந்த உள்ளத்தராய், ‘ வம்மின் - வருக; நீர் பசியின் வாடிவருந்திய மெய்யரானீர்
- நீவிர் பசியினால்வாடிவருந்திய உடலையுடையவரானீர்; (ஆதலின்), இன்று -இந்நாளில், எம்முடன் உண்டி மாற்றாது
- எம்மோடுகூடி அனசனதவத்தை மேற்கொள்ளாது, நீர் சரியைபோகி - நீவிர் சரியை சென்று,
(விதிப்படி உணவி உண்டு), நம்மிடைவருக-நம்பால் வருவீராக’, என்ன-என்று ஆணையிட, நற்றவன்
தொழுது சென்றார்-(அவ்விருவரும்) நற்றவராகிய சுதத்தாசார்யரை வணங்கிச் சென்றனர்.
இளைஞரின் மேனிவாட்டத்தைக் கண்ட
ஆசிரியர் சரியை செல்ல ஆணைஇட, இளைஞரிருவரும் குருவை வணங்கிச் சென்றன ரென்க.
உண்டிமாற்றுதல் - உண்ணாவிரதம்
மேற்கொள்ளல். சரியை-அருந்தவர், உபாசகர் முதலியோர் இறைவனருளிய திருவறமுறைப்படி
உத்தம சிராவகரிடம் உணவேற்கச் செல்லுதல். சிராவகர் - இல்லறத்தார். இவண் கூறிய
இளைஞர் இல்லறத்தாராயினும், ‘மனைதுறந்து மாதவர் தாளடைந்து நோற்று, வினையறுப்பா
னுத்திட்டனாம்
*
|
சீவக.
1580, |
1
|
நற்றவாத்
தொழுது. |
|