- 196 -

அரசனுடைய தேவி, கருதியதுஅது முடித்தாள் - மாமியையும் மன்னனையும் ஒழிக்கக் கருதியதாய அதனை நிறைவேற்றினவளாகி, மனம் நனி வலிதின் வாடி - மனத்தில் மிகவும் வாட்டமுற்றவள் போல வலிந்து காண்பித்து, மைந்தனை

வருகஎன்றாள் - மகனான யசோமதியை வருமாறுபணித்தாள்.

உழையரும் நகரமாந்தரும் பலவாறு கூறி வருந்துகையில், அரசி, மகனைத் தன்னிடம் வருவித்தாள் என்க.

இயல்பாக மனத்தில் வாட்டமில்லாமையின், ‘வலிதின்வாடி‘ என்றார்.  கருதியது கணவனையும் மாமியையும் கொல்லுதல் ஆதலின், ஆசிரியர் அச்செயலைச் சொல்வதற்கு அஞ்சி, ‘அது‘ என்று சுட்டினார்.

உழையர் - அருகிலிருந்து வேலைசெய்வோர்;  உழை -பக்கம். விஷத்தால் மடிந்ததை யறிந்த உழையர் கூற்றையும், பலியிட்ட தீவினையென நம்பிய நகரமாந்தர் கூற்றையும் அறம் முதலியவற்றில் நெறிமாறினான் என்று கூறிய அறிஞர்கூற்றையும் கருதி, ‘இனையன‘ என்றார்.          (79)

152.  இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்
  வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
  புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே
  மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.

(இ-ள்.) மறைபதிக்கு அமுதம்-ஆவாள் - சோரநாயகனுக்கு இனியளாகிய அமிர்தமதி (தன் மகனை நோக்கி), நீ தனியைஆகி இளையல் - நீ இவ்வாறு தனித்திருந்து வருந்தாதே; இறைவனில் பிரிந்தது - (நாம்) மன்னனைப் பிரிந்தது, என் கண் வினையினால் விளைவு - எனது தீவினையினது பயனாகும், மனத்து வெந்நோய் விடுத்திடு - (நின்) மனத்தின் கடிய வருத்தத்தை விட்டுவிடு; புனை  முடி கவித்து -அலங்கரித்த முடியைச்சூடி, பூமி பொதுக் கடிந்து -இப்பூவுலக ஏனைய அரசர்களுக்குப் பொதுவின்றி உனக்கே உரியதாக்கி, ஆள்க-பேரரசனாய் ஆள்வாயாக, என்று-என்று ஆசிகூறி, மனம் நனி மகிழ்ந்திருந்தாள் - (தன் எண்ணம் நிறைவேறியதனால்) மனம் மிகவும் மகிழ்ந்திருந்தாள்