- 197 -

அமிர்தமதி, மகனை நோக்கி, நீ மன்னனைப் பிரிந்ததுயான்செய்த தீவினை; இனி, இதற்கு வருந்தாது, முடிபுனைந்து ஆள்க வென்றாளென்க

என்வினை என்று கூறுவது உலகவழக்கு. ‘இனையைநீயாயதெல்லாம் எம்மனோர் செய்த பாவம்‘  (சீவக. 391,315) என்றது அறிக.  விடுத்திடு - ஒருசொல். யசோமதியின்  துன்பம் பெரிதாதலின்.  ‘வெந்நோய்‘  என்றார்.‘பொதுக்கடிந்து ஆளுதல்‘ பூமி பிற அரசர்களுக்கு உரிமையின்றி ஏகசக்ராதிபனாய் ஆளுதல்.                         (80)

யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

153.  வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி
  யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்
  சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல்1 செல்லான்
  ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.

(இ-ள்.) ஏர் அணி ஆரம்மார்பன் - அழகிய  ஆரமணிந்த மார்பினனான, இசோமதி - யசோமதி, வார் அணிமுரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த மங்கள முரசு முழங்க, மணிபுனை மகுடஞ் சூடி - மணிபுனைந் தியற்றிய முடியைச் சூடி, இறைமை எய்தி - ராஜபதவியை அடைந்து,  சீர்அணி அடிகள் - (தேவர்கள் இயற்றிய) சிறப்படைந்த ஆதி பகவன் அருளிய, செல்வத் திரு அறம் - முக்திச்  செல்வத்தைத் தரும் திருவறத்தினை, மருவல் செல்லான் - சேராதவனாகி, ஓர் அணி ஆரமார்பர் - ஒப்பற்ற அழகிய ஆரமணிந்தமார்பினாரான மாதர்களின், உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் - காமக்கடலினுள் மூழ்கி இன்புற்றான். (எ-று.)

யசோமதி அரசனாகி, திருவறத்தை மேற்கொள்ளாமல் மகளிர் இன்பத்தை அனுபவித்தானென்க.

இறைமை-அரசனாந் தலைமை. திருவறம் - ஜிநதருமம்.

 

1 மருளல்.

2 மார்ப னுவகை.