154. |
இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் |
|
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம |
|
இனையது தெளிவி லாதா ரிருநில வரசு செய்கை |
|
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். |
(இ-ள்.) வனை மலர் மகுட மாரிதத்தனே - புனைந்த
மாலையும் முடியு மணிந்த மாரிதத்த வரச, வினையின் ஆகும் இயல்பு - வினைகளின் நேருந் தன்மைகள், இனையன - இத்தன்மையன; துணைவர்ஆகும் - (தனக்குத்)
துணைவரான, இளையரின்-மகளிரால் விளையும் இன்பம் - ‘உண்டாகும் இன்பங்கள், இளையன - --, தெளிவு இலாதார் - நற்காட்சியில்லாதவர், இருநிலம் அரசு செய்கை
- பெரிய பூமியை அரசாளுந் தன்மை, இனையது - இத்தகையது; இது தெரிதி ஆயின் - இதனைத் தேர்வாயானால், இது மதி என்றான் - யான் கூறிய இதனை
மனத்தில் உறுதி தருவதாகக்கொள் என்று அபயருசி கூறினான். (எ-று.)
அபயருசி மாரித்ததனைக் குறித்து, வினைகளின் இயல்பும், மனைவியின் செயலும், அறம் மேற்கொள்ளாத வரசரின் கதியும் இனையன ஆகும். ஆதலின் இன்னும் இதனை
மதித்துக் கேள் என்று கூறினானென்க.
நஞ்சூட்டியதனை, ‘இளையரின் விளைவு'; என்றான்.
மாரிதத்தன், தன் அரசியற்செயலை ஆராய்தல் வேண்டி, ‘இளையது தெளிவிலாதார் இருநிலவரசு
செய்கை‘ என்றான் எனினுமாம்.(82)
இரண்டாம்
சருக்கம் முற்றிற்று.
-------
|