- 199 -

மூன்றாஞ் சருக்கம்

---:: ::---

யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்

155.  மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்
  நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
  பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
  புற்ற தாகு முரைக்குறு கின்றதே.

(இ-ள்.) அ மன்னன் - அந்த யசோதரன், மதிமதி - சந்திரமதி, என்ற இவர் - என்ற இருவரும், நல்தவத்து இறை- நல்ல தவமுடைய முதல்வனாகிய ஆதிபகவன் அருளிய, நல்லறம் - திருவறத்தினை, புல்லலா-சேராத, பற்றினோடு முடிந்தனர் - பற்றினால் ஈட்டிய வினைகளோடு இறந்தனர்; (அதனால் அவாகட்கு), பல் பிறப்பு உற்றது ஆகும் - பல பிறவி நேர்ந்ததாகும், உரைக்க உரைகின்றது - நாம் உரைப்பதற்கு அமைந்திருக்கின்றது (அதுவே) (எ-று.)

மன்னனும் தாயும் உற்ற பிறவிகளை இனிக் கூறுவாம் என்றா ரென்க.

மற்று, ஏ, அசைகள். நல்லறம் - தருமோபதேசம். ‘அவாவென்ப வெல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப்பிறப்பீனும் வித்து‘  ஆகலின், பற்றினோடு இறந்ததனால், ‘பல்பிறப்பு உற்றது‘ என்றார்.  உரைக்க என்பதில் அகரம் தொக்கது.                                                   (1)

156. விந்த நாம் விலங்கலின் மன்னவன்
  வந்தொர் மாமயி லின்வயிற் றண்டமாய்
  வந்து நாளிடை நாயொடு கண்டகன்
  வந்தொர் வாளியி னான்மயில் வாட்டினான்.

     (இ-ள்.) மன்னவன் - யசோதரன், விந்த நாம விலங்கலில்-விந்த்யகிரி என்னும் பெயருடைய மலியிடத்தே, ஓர் மாமயிலின் வயிற்றுவந்து - ஓர் அழகிய மயிலின் கருவில் வந்து, அண்டமாய் நந்தும் நாள் இடை - முட்டையாய்க்.