- 200 -

கருமுற்றி வளரும் நாளில், கண்டகன் - வேடன் ஒருவன், நாயொடுவந்து - வேட்டை நாயுடன் வந்து, ஓர் வாளியினால் ஓர் அம்பினால், மயில் வாட்டினன் - அம்மயிலைக் கொன்றான்.

மன்னனை முட்டையாகக் கருவில் கொண்டுள்ள மயி்லை ஒரு வேடன் கொன்றா னென்க.

நாமம் - பெயர். விலங்கல் - மலை நந்துதல் - வளர்தல். கண்டகன் - முட்போன்றவன்; கொடியோன்  மயில், முட்டையிடுவதற்குமுன் அதனை வேடன் கொன்றானென்க.

157.  அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்
  வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
  கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
  நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.

(இ-ள்.) அவன் - அவ்வேடன், அம்பின் வாய் விழும் - அம்புபட்டுப் பிளவுற்ற வழியாக வெளிவந்த, அண்டம் - மயிலின் முட்டையை, எடுத்து - எடுத்துக் கொண்டு போய், கொம்பு அனாய் - பூங்கொம்பு போல்பவளே, இது கொண்டு - இம்முட்டையைக் கொண்டு, வம்பு வாரணமுட்டையின் உடன்வைத்து - புதிய கோழிமுட்டையுடன்  வைத்துப் பொரிக்கச்செய்து -வளர்க்க என - வளர்ப்பாயாக என்று சொல்லி, நம்பு - (தான்) விரும்புகின்ற, காமர் அழகிய, புளிஞி - வேட்டுவச்சியின், கை - கையிலே, நல்கினான் - கொடுத்தான் (எ-று.)

வேடன், அம்பின்வழி வெளி வந்த மயிலின் முட்டையைக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுத்தா னென்க.

வம்பு - புதுமை.  வாரணம் - ஈண்டுக் கோழி.  நம்பு-விருப்பம்; ‘நம்பும் மேவும் நசையாகும்மே, ‘புளிஞன் என்பது புளிந்த; என்னும் வடசொல்லின் திரிபு.  புளிஞி, பெண்பாற் சொல்.  அடைகாத்தற்குத் தாய்மயில் இன்மையின் கோழிமுட்டையுடன் வைத்து வளர்க்கச் சொல்லினான்               (3)

158. சந்தி ரம்மதி யாகிய தாயவள்
  வந்து மாநக ரப்புறச் சேரிவாய