- 201 -
  முந்து செய்வினை யான்முளை1 வாளெயிற்
  றந்த மிக்க2 சுணங்கம் தாயினாள்.

(இ-ள்.) சந்திரமதியாகிய தாயவள் - தாயாகிய சந்திரமதியும், முந்து செய் வினையால் - முன் செய்த தீவினையால், மா நகரப் புறச் சேரிவாய் வந்து - உஞ்சயினியின் புறத்தேயுள்ள சேரியில் வந்து, முளை வாள் எயிறு - முளை போன்ற ஒளியுள்ள பற்களையுடைய, அந்தம் மிக்க சுணங்கம் அது ஆயினாள் - அழகுடைய (பெண்) நாயாகப் பிறந்தாள்.

சந்திரமதி சேரியில் நாயாகப் பிறந்தா ளென்க

முனைவாள் எயிற்று என்னும் பாடத்திற்குக் கூரிய வாள் போன்ற பல்லையுடைய என்க.  சுணங்கம். ‘சுனக‘ என்னும் வடசொல்லின் திரிபு, பெண் நாய் என்பது கன்னட காவியத்தினால் அறியலாயிற்று.                       (4)

159.  மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்
  கியலு பாயன மென்று கொடுத்தனர்
  மயரி1 யாகு மிசோமதி மன்னவன
  இயலு மாளிகை யெய்தின வென்பவே.

(இ-ள்.)  மயிலும் நாயும் - --, வளர்ந்தபின் - தத்தம் இடத்தே வளர்ந்த பின், மன்னனுக்கு - யசோமதிக்கு, இயல் உபாயனம் என்று - பொருந்திய கையுறை என்று, (வளர்ந்தவர்கள்) கொடுத்தனர் - --, (அவையிரண்டும்) மயரி ஆகும் - காமுகனாகிய, இசோமதி மன்னவன் - --,இயலும் மாளிகை - வாசம் செய்யும் மாளிகையை, எய்தின - அடைந்தன. (எ-று.)

மயிலும் நாயும் கையுறையாகக் கொடுக்கப்பட்டு அரண்மனையில் வளரலாயின வென்க.

உபாயனம் - கையுறை. மகளிர் உவகையின் மூழ்கின வனாதலின் (153) மயரி என்றார். ‘மயரிகள் சொற்பொருள் கொண்டு‘ என்பது (திருநூ. 53) காண்க.   (5)

 

1 முனை.

2 மில்லச்.

1 வயிரி.(159)