- 210 -

(இ-ள்.) மன்னன் மாமயில் சூகரம் - மன்னனும் மயிலும் பன்றியுமாயிருந்த உயிர், வார்புனல் - (உஞ்சயினி நகரின் புறத்தில் ஓடும்) மிக்க நீரினால், இன்னல் செய்யும் - துன்பந்தரும், சிருப்பிரை யாற்றினுள் - சிருப்பிரை என்னும் யாற்றில், உன்னும் - நினைக்கத்தக்க, ஒப்புஇல் - --, உலோகித இப்பெயர் மன்னம்  - உலோகிதம் என்னும் இந்தப் பெயரைக் கொண்ட, மீனின் வடிவினதாயிற்று - மீனாகப் பிறந்தது.

முள்ளம் பன்றி, உஞ்சயினியின் அருகில் ஓடும் சிருப்பிரை யாற்றில் உலோகித மென்னும் மீனாகப் பிறந்ததென்க.

உலோகிதம்-சிவப்பு. சிருப்பிரையாறு, வடமொழியில் சிப்ராநதி என்று வழங்கும்.  ‘உஞ்சயினிப் புறத்தாறு‘ என்பர் (200) முன்னர்.               (19)

சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்

174.  சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
  முந்து சன்று முதலைய தாயது்
  வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான
  உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.

(இ-ள்.) சந்திரமதி முந்து நாய் கருநாகமாய் - சந்திரமதி முன்னே நாயும் கருநாகமுமாக, சென்று -பிறந்து இப்போது, முதலையது ஆயது - (அவ்யாற்றில்)  முதலையாய்ப் பிறந்த அது. வெந்து வேர்த்து - (முன் கரும்பாம்பாயிருந்த தன்னைக் கொன்ற சினத்தால்) வெதும்பி வைரங் கொண்டு, இன மீனை - சிறந்த உலோகித மீனை விழுங்குவான் - விழுங்கவேண்டி, உந்தி உந்தி உளைந்திடு

போழ்தினில் - நகர்ந்து நகர்ந்து (அதனைப் பிடிக்கவியலாது) வருந்துஞ் சமயத்தில். (எ-று.)

வைரத்தால் முதலை மீனை விழுங்க முயன்ற தென்க. உந்துதல் - ஈண்டு நகர்தல்.  ஆயது, பெயர்.                               (20)

175.  அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்
  வந்து வாயின் மடுத்தது கொண்டது்
  கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
  தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்