வந்து, கார் இருள் வண்ணத்த நாகம் ஆய் - மிக்க இருள்
போலும் நிறமுடைய கரும்பாம்பாய்ப் பிறந்து, அந்தில் - அவ்விடத்தே, ஊர்தர - ஊர்ந்து
செல்ல, பன்றி - அதனைக் கண்ட முள்ளம்பன்றி, வேர்த்து - வைரத்தால் கோபித்து,
உருள - உயிர் நீங்கி உருளும்படி செய்து (கொன்று), குடர் வெந்து எழும்பசி-(தனது) குடர்
கொதித் தெழும்பசியை, விட்டது - நீக்கியது. (எ-று.)
முட்பன்றி,
பசியாலும் வைரத்தாலும் கோபித்துக் கரும்பாம்பைக் கொன்ற தென்க.
வைரம், முன் மயிலாய் இருந்தபோது நாய் கவ்வியதனால்
உண்டாயது என்னலாம். (17)
172. |
தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் |
|
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் |
|
பாய நொந்து பதைத்துடன் வீ்ழ்ந்தரோ |
|
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. |
(இ-ள்.)
தாய் கொல் பன்றி - (முற்பிறவியின்) தாயைக் கொன்ற பன்றி, தளர்ந்து - (பாம்பைப்
கொன்றதனால்) வலிமை குறைந்து, அயர் போழ்தினில் - சோருஞ் சமயத்தில், சீயம்
ஒன்று என - ஒரு சிங்கம்போல, சீறு உளியம் எதிர்பாய - கோபங்கொண்ட கரடி. எதிர்சென்றுபாய,
பன்றி - --, நொந்து - மனம் நொந்து, பதைத்து உடன் வீழ்ந்து - துடிதுடித்து வீழ்ந்து,
இன்உயிர் பொன் றுபு போயது - இனிய உயிர் அழிந்துஇறநதிட்டது. (எ-று.)
கரும்பாம்பைக்
கொன்ற முட்பன்றி கரடி கொல்ல இறந்த தென்க. அரோ,அசை.(18)
மன்னனாகிய
முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173. |
மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் |
|
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் |
|
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் |
|
மன்னு மீனின் வடிவின தாயிற்றே. |
|