மயில்
மடிந்த காரணம் அறியாத யசோமதி நாயைக் கொன்றா னென்க.
இனி, பொன்றின மன்னவன் ஆயுமாறு அறியாத என்று நேரே கொண்டு
பொருள் கூறவுமாம். இப்பொருளில், மன்னவன் - மன்னவனை என்க. போற்றின மன்னவன்
என்ற பாடத்திற்கு, நாயை இரட்சித்த மன்னவன் என்று பொருள் கொள்க. ‘நாய் பெய்
பலகை‘; நாய், சூதாடுகாய். பலகை - சூதாடு பலகை. (15)
யசோதரனாகிய
மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170. |
மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி |
|
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை |
|
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய |
|
தன்ன தாகு மருவினை யின்பயன்.. |
(இ-ள்.)
மன்னன் மாமயில் வந்து - மன்னனாயிருந்த மயில் (இறந்து) மீண்டும் வந்து, விந்தக்
கிரி துன்னுஞ் சூழலுள் - விந்த்யகிரியைச் சார்ந்த நெருங்கிய மலைச் சாரலில், இன்னல்
செய்யும்-(பிற உயிர்களுக்குத்) தீங்கு செய்யும், சூழ்மயிர் முள்ளுடை - (உடல்) முழுவதும்
முள்மயிருடைய, ஓர் ரனமது ஆகியது - ஒரு பன்றியாய்ப் பிறந்தது; அருவினையின் பயன் -
விலக்குதற்கரிய தீவினையின் பலன், அன்னது ஆகும் - அத்தன்மையதாகும். (எ-று.)
மயில்,
மறு பிறப்பில் முள்ளம்பன்றி யாயிற்றென்க.
கிரி
- மலை. துன்னுஞ்சூழல், மரங்கள் சூழ்ந்து நெருங்கியுள்ள இடம். ‘சூழ்மயிர் முள்ளுடை
ஏனம்‘ எனவே, முள்ளம்பன்றி யாயிற்று. ஏனம் - பன்றி. (16)
171. |
சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் |
|
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய |
|
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் |
|
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. |
(இ-ள்.)
சந்திர மதி நாயும் - சந்திரமதியாகிய நாயும், அச்சாரலின் வந்து - அவ் விந்த்யமலைச்
சாரலில |