- 213 -

களுக்கு, உற்ற செய்கைக்கு - ஜீவச்சிராத்தம் செய்வதற்கு, உரித்து என -(உலோகித மீன்)  தகுதி வாய்ந்தது என்று, ஓதினார் - சொன்னர்கள்.  (எ-று.)

அந்தணர், அரசனிடம் உலோகிதமீன் ஜீவச்சிராத்தத்திற்கு உரியதாகும் என்றனரென்க.

அற்றம் - சமயம். ‘அற்றமே மறைவுஞ் சோர்வு மவகாசந் தானுமாமே‘, (சூ. நிகண்டு).  செந்தண்மை பூண்டொழுகும் அறவோரே அந்தணராவ ராதலின், ஈண்டு அருளிலாரையும் அந்தணரென்றது, இகழ்ச்சிக் குறிப்பு. முதலை இறந்து சிலநாட்கள் கழிந்தபின்பே உலோகிதமீன் வலையில் அகப்பட்டதாதலின், ‘மற்றை மீனும் ஓர் வார் வலைப்பட்டது‘ என்றார்.  ஜீவச்சிராத்தம்,  மீன் உயிருடன் இருக்கும் போதே அதைக்கொண்டு செய்யும் சிராத்தம். இது கன்னடபுராணத்திலும் கூறப்பட்டுளது.  ஜீவச்சிராத்தத்தைக் குறித்து வைதிக சமயத்தில் கூறியுள்ள இடம் தெரியவில்லை.  அற்றம் - முடிவுமாம்.    (24)

179. அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
  கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர
  இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன
  சிறக்க வென்றனர் தீவினை யாளரே.

(இ-ள்.) மீனின் - (நீரில் உயிருடன் வைத்திருந்த) உலோகித மீனிலிருந்து, அறுத்த அவயவம் ஒன்றினை - பின்பாகத்தில் அறுத்தெடுத்த ஒரு துண்டினை, தீவினையாளர் - கொடுஞ்செயலினராகிய அந்தணர், கறித்து - கடித்து மென்றுகொண்டே, இசோமதி  - யசோமதிவேந்தன், இப்புவி காக்க - இப்பூமியை நெடிது காப்பானாக, ஓர் - ஒப்பற்ற, இறப்பு அரும் துறக்கத்தில் - நீக்கமறும் சுவர்க்கத்தில், இசோதரன் - யசோதரமன்னன் (தாயுடன்), சிறக்க - சிறப்பெய்துவானாக, என்றனர் - என்று ஆசி கூறினர்.

உலோகிதமீனை உயிருடன் நீரில் வைத்திருந்து அதன் உறுப்புக்களில் சிறிது கொய்து அந்தணர் ஒமாக்கினியில் காட்டி அம்மீனைத் தின்று வாழ்த்துக் கூறினர் என்க.