- 215 -

மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்

181.  மன்னன் மாமயில் சூகர மாயமீன்
  முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
  மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின
  தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.

(இ-ள்.)  மன்னன் மாமயில் சூகரம் ஆய மீன் - மன்னனும் மயிலும் பன்றியுமா யிருந்த மீன், முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது - முன்னே தோன்றிய தாய்ஆட்டின் வயிற்றில் கருப் பூர்த்தியானதாகி, மன்னும் ஓர் ஆண் உரு எய்தி -பொருந்தியதோர் ஆண்ஆடாகப் பிறந்து, வளர்ந்த பின்  - பருவமடைந்த பின், தன்னை ஈன்ற - தன்னைக் கருவுயிர்த்த, அத் தாய்மிசை- அந்தத் தாய்ஆட்டின் மேல், தாழ்ந்தது - தங்கியது; (புணர்ந்தது).

உலோகித மீன் முன் சந்திரமதியாயிருந்து பிறந்த பெண்யாட்டின் வயிற்றில் பிறந்து, அத்தாயையே காமத்தால் புணர்ந்தது என்க.

கார மரித்து, சேரியில் ஆட்டின் பிணையாய்ப் பிறந்திருந்ததனால்(177) அதனை, ‘முன்னை ஆடு' என்று குறிப்பிட்டார்.  தாழ்ந்தது‘  இடக்காடக்கலாகும்.        (27)

தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.

182.  தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்
  ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர
  பாய வோடிப் பதைத்துயி்ர் போயபின
  தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.

(இ-ள்.) (அவ் வாண்யாடு காமத்தால்), தாயின் நல்நலம் - தன் தாயினது மிக்க இன்பத்தை, தான் நுகர் போழ்தினில் - தன் நுகரும் சமயத்தில், ஒரு வன் தகர்- மற்றோர் வலிய ஆட்டுக்கிடாய், ஆய கோபத்து - (தான் நுகர்தற்கின்மையான்) உண்டாய கோபத்தினால், அடர்த்து-எதிர்த்து, ஓடிப்பாய - ஓடி வந்து பாய்ந்ததனால், பதைத்து-