- 216 -
(யசோதரனாகிய ஆடு) துடி துடித்து, உயிர்போய பின் உயிர் நீங்கியபின், தாய் வயிற்றினில் தாதுவில் சார்ந்தது-(தான் புணர்ந்த) தாயின் கருவில்  சேர்ந்த தன் விந்துவில்அடைந்தது. (எ-று.)

தாயைப் புணர்ந்த (யசோதரனாகிய) ஆணாட்டின் உயிர் தன் விந்துவில் சார்ந்தது என்க. பாய்ந்தது வன்தகர் ஆதலின் இது இறந்தது.                 (28)

183.  தாய்வ யிற்கரு வுட்டக ராயது
  போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன
  மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன
  தாயை வாளியிற் றானுயிர்1 போக்கினான்.

  (இ-ள்.) தாய் வயின் கருவுள்போய் - (யசோதரன்) தாயிடத்துக் கருவில் சார்ந்து, தகராய் அது வளர்ந்துழி - மீட்டும் ஆணாடாகிக் கருமுற்றி வளர்கையில், பூமுடி மன்னவன்- அழகிய முடியணிந்த யசோமதி, மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்- அமைந்த வேட்டைமேல் விரும்பிச் சென்று மீள்பவன், தாயை - (கருமுற்றிய) தாய் ஆட்டினை, தான் வாளியின் உயிர் போக்கினான் - தானே தன் கை அம்பினால் கொன்றான். (எ-று.)

கரு முற்றிய ஆட்டை மன்னன் கொன்றானென்க.    தாய் வயின் - தாயிடத்தே; வயின், ஏழனுருபு.                                   (29)

184. வாளி1 வாய்விழும் வன்றகர்க் குட்டியை
  நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
  தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
  ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.

  (இ-ள்.) ஆளிமொய்ம்பன் - சிம்மம்போலும் வலிமையுள்ளவனான யசோமதி, நீள நின்ற புலைக் குலத்தோன்தனை - சிறிது தொலைவில் நின்ற புலையனை விளித்து,

 

1 வாளினிற்றன்னுயிர்.

1 வாளின்(184)