- 217 -

வாளி வாய் விழும் தகர்க் குட்டியை - அம்பு பாய்ந்த வழியாக வந்த விழுந்த வலிய ஆட்டுக்குட்டியை,. தான் வருத்தம் தவிர்த்து - (இதன் தாய் ஆட்டை) முயன்று வளர்த்த வருத்தத்தை விடுத்து, வளர்க்க என அருளினன்-வளர்ப்பாயாக வென்று கருணையால் உத்தரவு செய்தான்.

மன்னன், தகர்க்குட்டியை வளர்க்கும்படி புலையனிடம் அருளினானென்க.

அரசனுக்குக் கருணை பிறந்தமையால், ‘அருளினன்' என்றார்.  தாள் - முயற்சி.  முயன்று வளர்த்த ஆட்டைக் கொன்ற வருத்தம் விட்டு, இக்குட்டியை வளர்க்க என்றற்கு, ‘தான் வருத்தம் தவிர்த்து'  என்றார்.  வாளி - பாணம்; வாதிராஜரும் ‘ஸாணெந' என்றே கூறியிருத்தலால் ‘வாளி' என்ற பாடமே கொள்ளப்பட்டது.                           (30)

யசோமதி பலியிடும் செய்தி கூறல்

185.  மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்
  பெற்றி யாற்பர விப்பெரு1 வேட்டைபோய்
  உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்2
  கொற்ற மிக்3கெரு மைப்பலி யொன்றரோ.

  (இ-ள்.) மற்று ஓர் நாள் - பின் பொருநாள், மன்னவன் - யசோமதி, மறமாதிற்கு  -சண்டமாரிக்கு, பெற்றியால் பரவி - முறைப்படி வணங்கி, பெரு வேட்டைபோய் - பெரியவேட்டைமேற்சென்று, உற்ற - தன்னிடம் அகப்பட்ட, பல் உயிர் கொன்று - பல பிராணிகளைக் கொன்று,வந்து - திரும்பி மாரிகோயில் வந்து, கொற்றம் மிக்க - வலிமிக்க, எருமைப்பலி ஒன்று ஏற்றினான் - எருமை ஒன்றைப்பலியாகக் கொன்றான்.  (எ-று.)

மன்னன், மாரிக்கு எருமைப்பலி யிட்டா னென்க.

வீரமகளாதலின், ‘மறமாது‘ எனப்பட்டாள்.  மறம் - வீரம் - கொன்று உவந்து எனவும் பிரித்துக் கூறலாம்.  பலி

 

1 பொரு

2 தேற்றினான்

3 கொற்றவிக்