யிட்ட
தினம், ‘மஹாலய அமாவாசை‘ யென்பர் கன்னட காவியத்தார். அரோ, அசை. (31)
186. |
இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் |
|
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் |
|
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார |
|
நின்று பின்சில நீதிகள் ஓதினார். |
(இ-ள்.) அந்தணர் - வேதியர்
(வேந்தனிடம்), இன்று எறிந்த - இன்று பலியிட்ட, எருமை இதுதனை - இவ் வெருமையின்
ஊனை, தின்று தின்று - --, சிராத்தம் செயப்பெறின் - நின்குல முன்னோர்களுக்குச்
சிராத்தம் செய்யப் பெறுமானால், இது நன்று என்றனர் நல்கினார்- இது நன்று என்று விரும்பிக்கூறினார்;
பின் -பிறகு, நின்று சில நீதிகள் ஓதினார்- அரசன்முன் நின்று மீண்டும் சில நீதிகளைக்
கூறினார்கள். (எ-று.)
எருமையூன் சிராத்தத்திற்கு
ஆகுமென வாங்கி, மீண்டும் சில நீதி கூறுகின்றன ரென்க.
நல்குதல் - விரும்புதல். ‘நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்‘ (மணி. 12 :
56) என்பது காண்க. தின்று தின்று, அடுக்கு. சிலர் என்றும் பாடம்.
(32)
187. |
ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் |
|
காது காகங் கவர்ந்தன வாமெனின் |
|
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென |
|
ஓதி னாரினி யொன்றுள தென்றனர். |
(இ-ள்.) (இவ்வெருமையூன்), ஆதபத்தில் உலர்ந்தது-வெயிலில் உலர்ந்தது:
ஆதலால் - ஆதலின், (அதனை) காது காகம் கவர்ந்தன ஆம் எனின் - தாக்குகின்ற
காகங்கள் கவர்ந்து எச்சிலாக்கின என்றால், தாம் சிராத்தம் செயற்கு - தாங்கள்
சிராத்தம் செய்வதற்கு. தீது என-தீதாகு மென்று, ஓதினார் - கூறினார் (பின் அவர்கள்),
இனி - இனி இதற்குப் பரிகாரம், ஒன்று உளது - --, என்றனர்-என்று
சொல்லினர். (எ-று.)
|