- 226 -

கொண்ட ஆடு, ‘சினை கொண்டாடு‘ என வந்தது. யசோமதியின் அம்பு பட் டிறந்த பெண்யாட்டை, ‘முன் சினை கொண்ட ஆடு‘ என்றார்.       (44)

199.  சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
  வந்தி டங்கரு மாகிய வாடது
  நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
  வந்து மாயிட மாகி வளர்ந்ததே.

(இ-ள்.) சந்திரமதி - --, நாய் கருநாகமாய் - நாயும் கரும்பாம்புமாகி, வந்து -    சிருப்பிரையாற்றில் வந்து, இடங்கரும் ஆகிய ஆடது - முதலையுமாகிய ஆடானது, பல் பொருள் நந்தும் நாடு - பல்வகைப் பொருள்களும் நிறைந்த நாடாகிய, கலிங்கத்து வந்து - கலிங்க தேசத்தில் வந்து, மாயிடம் ஆகி - எருமையாய்ப் பிறந்து, வளர்ந்தது - --,

சந்திரமதி, கலிங்க தேசத்தில் எருமையாய்ப் பிறந்தாளென்க.

சந்திரமதி, மீண்டும் மீண்டும்    பெண்பிறவியே பெற்றமை யறிக.  இடங்கர் - முதலை. மணிகள் முதலியனவும் நிறைதலால், ‘பல் பொருள் நந்தும்‘ என்றார்.  மயிடம் - மாயிடம் என நீண்டு நின்றது; விகாரம்.  இது, மஹிஷம் என்னும் வட சொல்லின் திரிபு.  சந்திரம்மதி, விரித்தல் விகாரம்.          (45)

200.  வணிகர் தம்முடன் மாமயி டம்மது
  பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
  அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
  வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.

(இ-ள்.) வணிகர் தம்முடன் - கலிங்க நாட்டின் வியாபாரிகளோடு (போந்த), மா மயிடம் அது - அந்தப் பெரிய எருமையானது, பணிவு இல் பண்டம் - தாழ்வில்லாத மிக்க பண்டங்களை, பரிந்து உழல்கின்ற நாள் - சுமந்து திரிகின்ற நாட்களில், வணிகர் - அவ்வியாபாரிகள், அணிகொள் உஞ்சயினி புறத்து - அழகுடைய உஞ்சயினி நகரத்தின் பக்கத்தே ஓடும், ஆற்று