- 233 -

உருவினள் ஆயினள் - நீர் ஒழுகும் புண்ணையுடைய உடம்பினையுடையளாய், முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் - உடல் நிறைந்த சீயினால் முடை நாற்றம் நாறும் மேனியளாய், தொழுவல் பல் பிணி நோய்களும் - தொழுநோய் முதலிய வலிய பல பிணிகளும், துன்னினாள் - அடைந்தாள் (எ-று.)

அரசி தொழுநோய் முதலிய பல நோய்களை அடைந்தாளென்க.

அஃகுதல் - குறைதல், முடை - துர்நாற்றம்,  இந்நோய் இடையில் தோன்றியதாதலின், ‘ஆயினள்‘ என்றார்.  பிணிநோய் - பிணிக்கும் நோய்; ஒருபொருட் பல்மொழியுமாம்.

211.  உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
  இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
  எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
  பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.

(இ-ள்.) உம்மை வல்வினையால்- முற்பிறப்பிலாகிய வலிய தீவினையினால், உணர்வு ஒன்று இலாள் - சிறிதும் அறிவு இல்லாதவளாயினாள், இவை - நோய் முதலிய இவை, இம்மை செய்த வினைப்பயனே - இப்பிறப்பில் (இவள்) செய்த தீவினைப் பயனே, இனி, இனிமேல், இவ்வினை - இவ்வினைகள், எம்மையும் நின்றிடும் - எப்பிறப்பிலும் நின்று வருத்தும், இவள் பொன்றினும் - இவள் இறந்தாலும், பொன்றல - (இவ்வினைகள்) நாசமடையா, பொய்ம்மை அன்று - இது நிச்சயம்.   (எ-று.)

உம்மைவினையால் பாகனோடு சேர்க்கை யாயிற்று; பாகன் சேர்க்கையால் இம்மையில் நோயும் மறுமையில் நரகபந்தமும் ஆயின என்க.

உம்மை - முற்பிறப்பு.  இம்மை - இப்பிறப்பு.  எம்மையும் - எப்பிறப்பும்.  அமிர்தமதி, முற்பிறப்பின் வினைத் தொடர்பால் பாகனோடு சேர்ந்தனள் ஆதலின் அதனை, ‘உம்மை வல்வினையால் உணர்வொன்றிலள்‘ என்றும், தீயஎண்ணத்தால் குஷ்டரோஹியுடன் சேர்ந்ததனால் இப்பிறவி