- 235 -
  ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
  சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.

(இ-ள்.) என்று இப்படி - என்றிவ்வாறு, தன்புறத்து - அரசியின் இருப்பிடத்திற்கு வெளியே (ஆட்டின் அருகே) கூறினர் -கூறினவராய், சேடியர் சென்று பற்றிய அத் தகர்-சேடியர் போய்ப் பிடித்த அந்த ஆட்டுக்கிடாய், உற்ற ஒன்றும் உணர்ந்து -  தனக்கு நேர்ந்த மரணத்தையும் உணர்ந்து, சிந்தையின் நொந்து - மனத்தில் வருந்தி, சென்று - (சேடியருடன்) போய், அவள்தன்னையும் கண்டது - அவ்வமிர்தமதியையும் பார்த்தது.  (எ-று.)

முன் நடந்தவற்றைச் சேடியார லறிந்த யசோதரனாகிய ஆடு தேவியைக்  கண்டதென்க.

புறம் - பக்கம். கூறினர்.  முற்றெச்சம்.  அம்பின் வழித் (184) தோன்றி, ஆளி மொய்ம்பனருளால் வளர்ந்து (188) எருமையூனைப் புனிதமாக்கத் (189) தம்மெனக் கொணர்ந்த ஆடு(190) பழம்பிறப்புணர்ந்து பல நினைந்து (197)  தன் மனைவியைக் காணாது வருந்தி (198), தனையன் மாளிகையில் வசித்ததாதலின், அதன் பக்கத்தே சென்ற சேடியர்(208 முதல் 212 வரை) கூறிய அனைத்தும் அறிந்து தேவியைக் கண்டு நொந்தது என்க.  “இத்யுபாத்த வசனே நிகடஸ்தே, சேடிகா ஸதஸி கண்டித பஸ்த; இத்யமன்யத நிரீக்ஷ்ய நிஜஸ்த்ரீம், க்ரோததோ குருகுராயத கோண;” என்னும் (வாதி - 3, 72.) வடமொழிச் சுலோகத்தால், சேடியர் ஆட்டின் அருகே சென்று கூறினர் என்பதை அறியலாகும்.

214.  தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
  பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
  பாவி நின்னுரு வின்னண மாயது
  பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.

(இ-ள்.) (அத்தகர்), தேவி - தேவியே, என்னை - --, முனிந்தனை சென்று -வெறுத்துச் சென்று,  ஒருபாவிதன்னை - பாவியாகிய பாகனை, மகிழ்ந்த பயன்