கொலோ
- மகிழ்ந்த பலன்தானோ! பாவி நின் உரு - பாவியாகிய நின் உருவம், இன்னணம்
ஆயது - (தொழு நோயால்) இவ்விதம் மாறியது; பாவி - பாவியே, என்னையும் இன்னணம்
பற்றினை - என்னையும் இவ்விதம் வதைக்கப்பிடித்தனை.
ஆடு, தேவியே
நீ பாகனால் நோயுற்று இப்பொழுது என்னையும் கொல்லக் கொணர்வித்தாயே யென்றதென்க.
முனிந்தனை, முற்றெச்சம், இன்னவண்ணம் என்பது இன்னணம் என்று மருவிற்று.
பாவி என்னையும் என்பதற்கு, பாவியாகிய என்னையும் என்றும் பொருள் கூறலாம்.
215. |
நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை |
|
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை |
|
வஞ்ச னைமட வாய்மயி டம்மது |
|
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ. |
(இ-ள்.) வஞ்சனை மடவாய் - வஞ்சகமுள்ள இளையோய், அன்னையோடு
என்னை - என் தாயோடு என்னையும், நஞ்சில் நலிந்தனை - விஷத்தால் மடித்தாய்; எஞ்சல்
இல்சினம் - குறைதலில்லாத நின் செற்றம், இன்னம் இறந்திலை - இன்னமும் விட்டாய்
இல்லை; மயிடம் அது துஞ்சும் நின்வயிற்று - எருமையின் தசை தங்கியிருக்கும் நினது வயிற்றுள்,
என்னையும் சூழ்தியோ - என்னையும் சேர்க்க ஆலோசனை செய்கின்றாயோ! (எ-று.)
முன்னைப்போல்
மீண்டும் மடிக்கக் கருதுகின்றனையோ என்று ஆடு எண்ணிற்றென்க.
இறத்தல் - கடத்தல்; விடுதல். சூழ்தல், கருதுதல். துஞ்சுதல் - தங்குதல்; ‘வலி துஞ்சு
தடக்கை‘ என்பதுபுறம். யசோதரனாகிய ஆடு சேடியர்கூற்றால், அரசி எருமையூனை உண்டதனை
அறிந்து கூறிற்றென்க. (61)
216. |
என்று கண்ட மொறுமொறுத் தென்செயும் |
|
நின்று நெஞ்சம துள்சுட நின்றது |
|
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் |
|
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி. |
|