- 238 -
218.  கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
  சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்
  கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
  மண்டு போர்வினை வல்லவு மாயவே.

(இ-ள்.) மன்னவன் - யசோமதி, கண்டு - (கோழிகளிரண்டையும்) கண்டு, கண் களிகொண்டனன் - கண் களி கூர்ந்தவனாகி, சண்டகன்மியைத் தந்து - தளவரனாகியசண்ட கருமனை வருவித்து (அவனிடம்), வளர்க்க என-(இந்தக் கோழிகளை) வளர்ப்பாயாக என்று பணிக்க, அவன் - அந்தச் சண்ட கருமன், கொண்டுபோய் - (அவற்றைக்) கொண்டுபோய், கூட்டுள் வளர்த்தனன் - கூட்டில் வைத்து வளர்த்து வரலானான் (அவ்விரு கோழிகளும்), மண்டு போர் வினை - மிக்குச் செல்கின்ற போர்த்தொழிலில், வல்லவும் ஆய - திறமையுடையனவும் ஆயின.  (எ-று.)

கோழிகள் சண்டகருமனிடம் வளர்ந்து   போர்த் தொழிலில் திறமை பெற்றன வென்க.  (64)

219. தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன
  மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை1 மணிமுடி தனையொத்த
  வொளிரு பொன்னுகிர்ச்2 சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ
  தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.

(இ-ள்.) தரளமாகிய நயனத்தொடு - சலிப்பனவாகியகண்களும், சாபம்போல் அம் சிறை - இந்திரதனுசைப் போன்ற அழகிய சிறைகளும், மணிமுடிதனை யொத்த சுடர்சிகை - மாணிக்கமணி யிழைத்த முடிபோ லொளிரும் கொண்டையும், ஒளிரும் பொன் உகிர் சரணங்கள் - விளங்குகின்ற பொன்போன்ற நகங்களையுடைய கால்களும், வயிரமுள் - வயிரம் போலும்  முள்ளும் உடையனவாய், ஒப்புஇல போரின்கண் - போர்த்தொழிலில் நிகரில்லாதனவாய், தளர்வு இல்வீரியம் - குன்றாத வீரியமும் அடைந்து, தகைபெற - அழகு உற,

 

1 சுடர்க்கண.

2 பொன்னன்.