வளர்ந்தன - --, தமக்கு - அக்கோழிகளுக்கு, இணை ஒப்பாவன, அவை தாமே -அந்தக் கோழிகளே;
பிற இல்லை.
கோழிகள் மிக்க
அழகுடையனவாய்ப் போர்ப்பயிற்சியும் பெற்றிருந்தன வென்க.
தானம் - முத்தும்ஆம்.
சாபம் - வில். சவி - ஒளி. சனம், (வடமொழி) மக்கள். சிகை - உச்சிக் கொண்டை.
மணி, சிவந்த மாணிக்கமணி. முள், நகங்களுக்கு மேலிடத்த தாய்க்காலிலுள்ள விரல்.
‘சவியன்ன மருளும் மாசனம் வளர்விழி‘ என்னும் பகுதி பிழைப்பட்டிருக்கும் எனத் தோன்றுகின்றது;
இதன் பொருள் அமைதியாயில்லை. இனி, ‘தரளமாகிய நயனத் தொடஞ்சுர சாபம்போற் சவி
என்ன மருளு மாசனம் வளர் சிறை‘ என்பது பாடமாகக் கொள்ளின் பொருள் சிறக்கும்.
‘சுரசாபம்‘ என்னுஞ் சொல் கன்னட காவியத்திலும் வந்துளது. “தரள நயநௌ தாரம்யாமை;
பதத்ர பரிச்சதை; வயஸி தததௌ சூடாரத்னம் ஜபா குஸுமச்சவி, கனகநிகஷச்சாயா சௌர்யோல்லஸச்
சரணாங்குரௌ, ஸுக மவ்ருததரம் தௌ தத்வாஸெ ஸுபஞ்சா வாஸிதௌ.” என்னும் வாதிராஜர்
(3, 84) வாக்கு ஈண்டு நோக்கற் பாலது. (65)
மூன்றாஞ்
சருக்கம் முற்றிற்று.
-------
|