அத் தளவரனை நோக்கி, சீர் அருள் பெருகும் பான்மை திறத்தனே
போலும் - சிறந்த கருணை வளரும் ஊழின் கூறு உடைய பவ்யனே என்று நினைந்து, கூர் அறிவு
உடைய நீரார் -நுண்ணிய அறிவினை யுடைய தன்மையாளர், மனத்தினால் குறிப்பது -மனத்தில்
கருதுவது(சிந்திப்பது), பேர் அறிவு ஆகி - சிறந்த ஞானஸ்வரூபமாகி, தம்மில் பிறழ்வு
இலா உயிரை அன்றே - தம் ஸ்வரூபத்தினின்றும் மாறுபடாததாகிய ஆத்மாவின் தன்மையினையே
யன்றோ? (எ-று.)
முனிவர் அவனை நோக்கி, அறிஞர் சிந்திப்பது உயிரைப்பற்றியே
என்றாரென்க.
இதுவும் அடுத்த கவியும் ஒரு தொடர்.
தளவரனது பவ்யத்வத்தை அறிந்தாராதலின், ‘சீர் அருள் பெருகும்பான்மைத் திறத்தனே‘
என் றெண்ணினார். போலும், உரை யசை, உயிர், ஆகுபெயர். அன்று,ஏ,அசைநிலையுமாம்:பிரசித்தமான
பொருளதுமாம். (7)
227. |
அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி |
|
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச் |
|
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி |
|
அனந்தகா
லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான். |
(இ-ள்.)
நினைந்த - (எம்மால்) நினைந்த, அனந்தம் ஆம் அறிவு காட்சி அருவலி போகம் ஆதி
-கடையிலா அறிவுகாட்சி வீரியம் இன்பம் முதலான, எண்குணங்களோடு - எட்டுக் குணங்களோடு,
நிருமலம்ஆகி - நிர்மலமாய், நித்தம் ஆகி - நித்தியமாய், சினம் செறுவு ஆதி இன்றி,
- சினம் செற்றம் முதலிய குற்றங்களில்லாததாய், திரிவித உலகத்து உச்சி - மூவுலகத்து
உச்சியில், அனந்த காலத்து நிற்றல் - (அழிவுஇன்றி) எக்காலத்தும் இன்புறுவது, அப்பொருள்
தன்மை - அவ்வுயிரின் தன்மை, என்றான் - என்று முனிவர் கூறினார். (எ-று.)
முனிவர் உயிரின் தன்மையை யுரைத்தாரென்க.
|