|
'முத்திலங்கு
முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை |
|
வெற்றியுடன்
பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து |
|
இத்தலமு
முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை |
|
நித்தில
வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே’ (118) |
என்பது தொடக்கமான மூன்று பாடல்களும் அருகன் புகழ் மாலையே. இவை ‘படர்க்கைப் பரவல’ாகப்
பாங்குற விளங்குகின்றன.
பெருங்காவியப்
பண்பு
இங்ஙனம் சிறுகாவியமாகிய இதில் பெருங்காவியக் கூறுகள் பல விரவிவரக் காணலாம்.
பெருங்காவிய இலக்கணத்திற்குத் தண்டியலங்காரம் வகுக்கும் இலக்கணமே மேல்வரிச் சட்டமாக
விளங்குகிறது: ‘பெருங்காப் பியநிலை பேசுங் காலை’ என்னும் நூற்பாவில் காணும் பொருள்களிற்
பெரும்பாலனவும் இக் காவியத்தின்கண் இடம்பெற்றுள்ளன. சூதுபோரை எடுத்துக் கொண்டுள்ள
இக்காவியம் ‘மதுக்களியை’ எவ்விடத்தும் சுட்டாமை கருதற்பாலது.
நாககுமார
காவியமும் யசோதர காவியமும்
இந் நாககுமார காவியத்திற்கும் பிற காவியங்களுக்கும் தொடர்புண்டா
என்பதும் ஆய்தற்குரியது. காவிய அமைப்பில் யசோதர காவியத்துடன் இது ஒருசில வகைகளில் ஒத்துக்
காணப்படுகிறது. தெய்வ வணக்கம், அவையடக்கம், நூற்பயன், நாடு நகரச் சிறப்பு என்று வருகின்ற
முறைமை முதலிற் காணும் ஒருமை நிலை. இவற்றுள் அவையடக்கச் செய்யுள் இரு நூலிலும் ஒரே வகையில்
உரைக்கப்பட்டிருக்கின்றது:
|
'புகைக்கொடி
யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவி ளக்கை |
|
இகழ்ச்சியி
னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர் |
|
அகத்தினி
மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச் |
|
செகத்தவ
ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே’ |
என்பது நாககுமார
காவியத்தின் அவையடக்கம்.
|
'உள்வி
ரிந்த புகைக்கொடி யுண்டென் |
|
றெள்ளு
கின்றன ரில்லை விளக்கினை |
|
உள்ளு
கின்ற பொருட்டிற மோர்பவர் |
|
கொள்வ
ரெம்முரை கூறுதற் பாலதே’ |
என்பது யசோதர காவியம். இரு காவிய ஆசிரியரும் காட்டும் உவமை யொன்றாகவே அமைந்துள்ளது.
நாககுமார
காவிய காலம்
திருமணம் செல்வக்கேசவராய
முதலியார் தாம் எழுதிய ‘கம்பநாடர்’ என்னும் நூலிலே தமிழில் தண்டியலங்காரம்
தோன்றுவதற்கு முன்னரே
|