காவியங்கள்
ஏற்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூற்று வருமாறு.
“ |
தமிழில்
தண்டியலங்காரம் ஏற்படுவதற்கு முன்னரே |
|
ஐம்பெருங்
காப்பியங்களில் சிந்தாமணியும் ஐஞ்சிறு |
|
காப்பியங்களும்
ஏற்பட்டு விட்டன. இவைகளெல்லாம் |
|
பெரும்பான்மை
வடமொழிக் காப்பியங்களின் போக் |
|
கைப்
பின்பற்றியவை. இவற்றைப் பாடிய கவிகள் |
|
வடமொழிப்
புலமை நிரம்பிய ஜைனப் புலவர்கள்.” |
இப்பெரியார்
கருத்துப்படி தமிழ்த் தண்டியலங்காரம் தோன்றிய காலம் எனக் கருதப்படும் கி.பி. 12ஆம்
நூற்றாண்டிற்கு முற்பட்டவை ஐஞ்சிறு காவியங்கள் என்பது பெறப்படும். எனவே, ஐஞ்சிறு காவியங்களுள்
ஒன்றான நாககுமார காவியமும் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றிய நூல் என்பது வெளிப்படை.
ஐஞ்சிறு
காவியங்களுள் யசோதர காவியமும் நாககுமார காவியமும் பழைய உரைகாரர் எவராலும் மேற்கோளாக
எடுத்தாளப்படவில்லை. கி.பி.14ஆம் நூற்றாண்டில் அறம் பொருள் பயக்கும் காவிய நூற்
பாடல் களைத் திரட்டித் தந்துள்ள ‘புறத்திரட்‘டில் இவ்விரு காவியச் செய்யுள்கள் எதுவும்
இடம் பெறவில்லை. எனவே, இக்காவியங்கள் மேற்குறித்த கால எல்லைக்குப் பிற்பட்டுத்
தோன்றியவை என்று கொள்ளலாம் என்று கருதுவாரும் உண்டு. ஒரு நூல் முன்னையோரால் எடுத்தாளப்படாமையினாலேயே பிந்தியது என ஒருதலையாகத் துணிய முடியதாயினும் ஐயுறவு கொள்வதற்கு இடமுண்டு.
இருபத்துநான்கு
தீ்ர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் ‘ஸ்ரீபுராணம்’என்னும் மணிப்பிரவாள நடையிலுள்ள
தமிழ் நூலுள் நாககுமார காவியத்தின் தோற்றுவாயாகத் தரப்பட்டுள்ள சிரேணிக மகாராசனின்
வரலாறு காணப்படுகிறது. இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் பகுதியாகிய
ஸ்ரீ வர்த்தமான புராணத்தில் சிரேணிக மகாராசன் விபுலகிரி சிகரத்தில் உள்ள சமவசரண
மண்டலத்தில் ஸ்ரீ வர்த்தமானரைத் தொழுது போற்றியமையும், அங்குக் கௌதம சுவாமியிடம்
தன் முன்னைப் பிறப்புத் தொடர்பினை வினவியறிந்ததும் சொல்லப்பட்டிருக்கிறது (பக்.505-506).
சிரேணிக மகாராசனின் தேவியாகிய சேலினியைப் பற்றியும் குறிக்கப்பட்டிருக்கிறது. (பக்.512-513).
எனவே, ஸ்ரீபுராணத்திற்குப் பின்னரே இக் காவியம் தோன்றியிருத்தல் கூடும்.
தமிழிலுள்ள
ஸ்ரீபுராணத்தின் காலம் பல்வேறு குறிப்புகளைக் கொண்டு ஏறக்குறைய கி.பி.15ஆம் நூற்றாண்டு
என்று அந்நூற்பதிப்பிற்குத் தாம் எழுதிய ஆங்கில முகவுரையில் பேராசிரியர் வையாபுரிப்
பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழ் நூல் வடமொழியில் கி.பி.9ஆம் நூற்றாண்டில்
தோன்றிய ‘மகாபுராண‘த்தைப் பெரிதும் தழுவிச் செல்கிறது. பழங் கன்னடத்தில் கி.பி.997-ல்
இயற்றப்பட்ட ‘சாமுண்டராய புராண’மும் வடமொழி மகாபுராணத்தைப் பின்பற்றி எழுந்ததேயாகும்.
|