நாககுமாரன்
சரிதம் இந்நூல் மூலத்திலிருந்தே வளர்ந்து பெருகியது எனக் கருத இடமுண்டு. எனவே, இஃது
இம்மூல நூல்களின் காலத்திற்குப் பிற்பட்டுத் தோன்றியதாதல் வேண்டும்.
கி,பி.
பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்தர் என்பவர் அவப்பிரம்ஸ மொழியில் நாககுமார சரிதத்தை
விரிவாக யாத்துத் தந்தார் என்பது தெரியவருகிறது. இதை அடியொற்றியே வடமொழி, கன்னடம்
முதலிய பிறமொழிகளிலும் ஜைன ஆசிரியர்களால் இச் சரிதம் தனி நூலாகச் செய்யப்பட்டு
வந்திருக்கிறது. இவ்வகை வரலாற்றுச் சூழல்களைக் கொண்டு பார்க்கும் போது திருமணம்
செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் கொண்ட கருத்துப் பொருத்தமானது என்றே எண்ண இடமாகிறது.
ஆதலால், இத்தமிழ்க் காவியமும் கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றியது
எனக் கொள்ளலாம்.
பிற மொழிகளில் நாககுமார சரிதம்
‘நாககுமார
சரிதம்‘ என்பது ‘பஞ்சமி சரிதம்‘, ‘நாககுமார கதை‘ என்னும் பெயர்களாலும் பிற மொழிகளில்
செய்யப் பெற்றிருக்கிறது. அவப்பிரம்ஸ மொழியில் புட்பதந்தர் செய்த நூல் பற்றி
முன்னர்க் குறிப்பிடப்பட்டது.1
வடமொழியில் உள்ள நாககுமார சரிதம்2
அந்நூலை ‘நாகபஞ்சமி கதை‘ என்றும் குறிப்பிடுகிறது. இதனை இயற்றியர் சைனப்புலவராகிய
மல்லிசேனர் என்பவராவர். இவ்வடமொழிக் காவியத்தில் ஐந்து சருக்கங்களும் அவற்றுள்
முறையே 119, 74, 113, 105, 87 பாடல்களும் உள்ளன. இக் காவியத்தில் உள்ள 498
பாடல்களுள் ஒவ்வொரு சருக்கத்தின் ஈற்றிலுமுள்ள 5 பாடல்களைத் தவிர ஏனைய 493 கவிகளும்
‘அநுஷ்டுப்‘ என்னும் பாவகையில் அமைந்துள்ளன. கதைப் போக்கில் இவ் வடமொழிக் காவியத்திற்கும்
தமிழ்க்காவியத்திற்கும் ஒரு சில இடங்களில் வேறுபாடு காணப்படுகிறது. இந்நூல் தவிர
தாரசேனர் என்பவர் இயற்றிய வடமொழிக் கவிதையாலான நாககுமார சரிதம் ஒன்றும் உள்ளது.
இராமச்சந்திர முமுட்சு வடமொழியில் எழுதிய ‘புண்ணியாஸ்ரவ கதையிலும்‘ இச்சரிதம்
இடம் பெற்றுள்ளது. பாகுபலி
---------------------------------------------------------------------------- |