வாரமாகித் திருவடிக்குப் பணிசெய்தொண்டர் பெறுவதென்னே
ஆரம்பாம்பு வாழ்வதாரூ ரொற்றியூரே லும்மதன்று
தாரமாகக் கங்கையாளைச் சடையில்வைத்த அடிகேளுந்தம்
ஊருங்காடு உடையுந்தோலே ஓணகாந்தன் றளியுளீரே. 9
ஓவணமே லெருதொன்றேறு மோணகாந்தன் றளியுளார்தாம்
ஆவணஞ்செய் தாளுங்கொண்டு அரைதுகிலொடு பட்டுவீக்கிக்
கோவணமேற் கொண்டவேடங் கோவையாகஆ ரூரன்சொன்ன
பாவணத்தமிழ் பத்தும்வல்லார் பறையுந்தாஞ்செய்த பாவந்தானே. |