நெய்யும்பாலுந் தயிருங்கொண்டு நித்தம்பூசனை செய்யலுற்றார் கையிலொன்றுங் காணமில்லைக் கழலடிதொழு துய்யினல்லால் ஐவர்கொண்டிங் காட்டவாடி ஆழ்குழிப்பட் டழுந்துவேனுக் குய்யுமாறொன் றருளிச்செய்யீ ரோணகாந்தன் றளியுளீரே. 1
திங்கள் தங்கு சடையின்மேலோர் திரைகள்வந்து புரளவீசும் கங்கையாளேல் வாய்திறவாள் கணபதியேல் வயிறுதாரி அங்கைவேலோன் குமரன்பிள்ளை தேவியார்கோற் றட்டியாளார் உங்களுக்காட் செய்யமாட்டோ மோணகாந்தன் றளியுளீரே 2
பெற்றபோழ்தும் பெறாதபோழ்தும் பேணியுங்கழ லேத்துவார்கள் மற்றோர்பற்றில ரென்றிரங்கி மதியுடையவர் செய்கைசெய்வீர் அற்றபோழ்து மலர்ந்தபோழ்து மாபற்காலத் தடிகேளும்மை ஒற்றிவைத்திங் குண்ணலாமோ ஓணகாந்தன் றளியுளீரே. 3
வல்லதெல்லாஞ் சொல்லியும்மை வாழ்த்தினாலும் வாய்திறந்தொன் றில்லையென்னீ ருண்டுமென்னீ ரெம்மையாள்வான் இருப்பதென்நீர் பல்லையுக்க படுதலையிற் பகலெலாம்போய்ப் பலிதிரிந்திங் கொல்லைவாழ்க்கை யொழியமாட்டீ ரோணகாந்தன் றளியுளீரே.4
கூடிக்கூடித் தொண்டர்தங்கள் கொண்டபாணி குறைபடாமே ஆடிப்பாடி யழுதுநெக்கங் கன்புடையவர்க் கின்பமோரீர் தேடித்தேடித் திரிந்தெய்த்தாலுஞ் சித்தமென்பால் வைக்கமாட்டீர் ஓடிப்போகீர் பற்றுந்தாரீ ரோணகாந்தன் றளியுளீரே. 5
வாரிருங்குழன் வாணெடுங்கண் மலைமகள்மது விம்முகொன்றைத் தாரிருந்தட மார்புநீங்காத் தையலாளுல குய்யவைத்த காரிரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக்கோட்டமுண் டாகநீர்போய் ஊரிடும்பிச்சை கொள்வதென்னே யோணகாந்தன் றளியுளீரே. 6
பொய்ம்மையாலே போதுபோக்கிப் புறத்துமில்லை யகத்துமில்லை மெய்ம்மைசொல்லி யாளமாட்டீர் மேலைநாளொன் றிடவுங்கில்லீர் எம்மைப்பெற்றா லேதும்வேண்டி ரேதுந்தாரீ ரேதுமோதீர் உம்மையென்றே யெம்பெருமான் ஓணகாந்தன் றளியுளீரே. 7
வலையம்வைத்த கூற்றமீவான் வந்துநின்ற வார்த்தைகேட்டுச் சிலையமைத்த சிந்தையாலே திருவடிதொழு துய்யினல்லால் கலையமைத்த காமச்செற்றக் குரோதலோப மதவருடை உலையமைத்திங் கொன்றமாட்டே னோணகாந்தன் றளியுளீரே.8 |