xxxviii

கூறுநடைக்குழி கட்பகுவாயன பேயுகந்தாடநின் றோரியிட வேறுபடக்குட கத்திலையம்பல வாணனின்றாடல் விரும்புமிடம் ஏறுவிடைக்கொடி யெம்பெருமானிமை யோர்பெருமானுமை யாள்கணவன் ஆறுசடைக்குடை யப்பனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.                       2

கொடிகளிடைக்குயில் கூவுமிடம்மயி லாலும்மிடம்மழு வாளுடைய, கடிகொள்புனற்சடை கொண்டநுதற்கறைக் கண்டனிடம் பிறைத் துண்டமுடிச், செடிகொள்வினைப்பகை தீருமிடந்திரு வாகுமிடந்திரு மார்பகலத், தடிகளிடம்மழல் வண்ணனிடங்கலிக் கச்சியனேகதங்காவதமே.        3

கொங்குநுழைத்தன வண்டறைகொன்றையுங் கங்கையுந்திங்களுஞ் சூடுசடை, மங்குனுழைமலை மங்கையைநங்கையைப் பங்கினிற்றங்க வுவந்தருள்செய், சங்குகுழைச்செவி கொண்டருவித்திரள் பாயவியர்த்தழல் போலுடைத்தம், அங்கைமழுத்திகழ் கையனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.                                                 4

பைத்தபடத்தலை யாடரவம்பயில் கின்றவிடம்பயி லப்புகுவார் சித்தமொருநெறி வைத்தவிடந்திகழ் கின்றவிடந்திரு வானடிக்கே வைத்தமனத்தவர் பத்தர்மனங்கொள வைத்தவிடம்மழு வாளுடைய அத்தனிடம்மழல் வண்ணனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.     5

தண்டமுடைத்தரு மன்றமரென்றம ரைச்செயும்வன்றுயர் தீர்க்கும்மிடம், பிண்டமுடைப்பிற வித்தலைநின்று நினைப்பவராக்கையை நீக்குமிடம், கண்டமுடைக்கரு நஞ்சைநுகர்ந்தபி ரானதிடங்கட லேழுகடந், தண்டமுடைப்பெரு மானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.      6

கட்டுமயக்க மறுத்தவர்கைதொழு தேத்துமிடங்கதி ரோனொளியால்
விட்டுமிடம்விடை யூர்தியிடங்குயிற் பேடைதன்சேவலொ டாடுமிடம்
மட்டுமயங்கி யவிழ்ந்தமலரொரு மாதவியோடு மணம்புணரும்
அட்டபுயங்கப் பிரானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.        7

புல்லியிடந்தொழு துய்துமென்னாதவர் தம்புரமூன்றும் பொடிபடுத்த
வில்லியிடம்விர வாதுயிருண்ணும்வெங் காலனைக்கால்கொடு வீந்தவியக்
கொல்லியிடங்குளிர் மாதவிமவ்வல் குராவகுளங்குருக் கத்திபுன்னை
அல்லியிடைப்பெடை வண்டுறங்குங்கலிக் கச்சியனேகதங் காவதமே.     8

சங்கையவர்புணர் தற்கரியான்றள வேனகையாட விராமிகுசீர்
மங்கையவண்மகி ழச்சுடுகாட்டிடை நட்டநின்றாடிய சங்கரனெம்
அங்கையனல்லன லேந்துமவன்கனல் சேரொளியன்னதோர் பேரகலத்
தங்கையவன்னுறை கின்றவிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.     9

வீடுபெறப்பல வூழிகணின்று நினைக்குமிடம்வினை தீருமிடம்
பீடுபெறப்பெரி யோரதிடங்கலிக் கச்சியனேகதங் காப்பனிடம்
பாடுமிடத்தடி யான்புகழூர னுரைத்தவிம்மாலைகள் பத்தும்வல்லார்
கூடுமிடஞ்சிவ லோகனிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.        10

திருச்சிற்றம்பலம்