xxxvii

உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றா லென்குறைவென் இடரைத்து றந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திருமேற்ற ளியுறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.        4

எம்மான் எம்மனையென் றவரிட்டி றந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யு மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய் கனமேற்ற ளியுறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.     5

நானேல் உன்னடியே நினைந்தேன்நி னைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாய்என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற்ற ளியுறையும்
கோனே உன்னைஅல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே.     6

கையார் வெஞ்சிலைநாண் அதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரிஉண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற்ற ளியுறையும்
ஐயா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.       7

விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னை அல்லால்
உரையேன் நாவதனால் உடலில்உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற்ற ளியுறையும்
அரையா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.     8

நிலையாய் நின்னடியே நினைந்தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற்ற ளியுறையும்
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.    9

பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவின் திருமேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்அடியான் அடித்தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவலோகம் சேர்வாரே.           10

திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்தி நாயனார்
திருக்கச்சியனேகதங்காவதம்
பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

தேனெய்புரிந்துழல் செஞ்சடையெம்பெரு மானதிடந்திக ழைங்கணையக்
கோனையெரித்தெரி யாடியிடங்குல வானதிடங்குறை யாமறையாம்
மானையிடத்ததொர் கையனிடம்மத மாறுபடப்பொழி யும்மலைபோல்
யானையுரித்த பிரானதிடங்கலிக் கச்சியனேகதங் காவதமே.           1