xLv

சிவஞானசுவாமிகளுடன் திரும்புகையில் சங்கரநயினார் கோயிலில் தங்கியிருந்து இறைவன் திருவடி நீழலிற் கலந்தனர்.

சுசீந்திரத்திலிருந்த சின்னப்பட்டம் வேலப்பதேசிகர், ஆசிரியர்க்குச் சங்கரன்கோயிலில் வழிபாடுகள் ஆற்றுவித்துப் பின்னர்த் திருவாவடுதுறையைச் சிவஞான முனிவருடன் அடைந்து திருச்சிற்றம்பலத் தம்பிரானைச் சின்னப் பட்டத்திற்குரியவராக்கித் தாம் பண்டார சந்நிதியாக எழுந்தருளியிருந்தனர்.

அக்காலத்தில் சிவஞான சுவாமிகள் பஞ்சாக்கர தேசிகர்மாலை, சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரைத் திருத்தம், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கத்திற்கு மறுப்பாகிய இலக்கண விளக்கச்சூறாவளி, தம் ஆதீனத்தைச் சார்ந்தவர் எழுதிய மரபட்டவணையை மறுத்தெழுந்த தருமபுர ஆதீன நூலாகிய சித்தாந்த மரபு கண்டனத்திற்கு மறுப்பாகிய சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம் என்னும் நூல்களை இயற்றியருளினர்.

ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் ஆதீனத்துப் பண்டார சந்நிதியின் இசைவுபெற்றுத் திருவாவடுதுறையினின்றும் நீங்கி வழியிலுள்ள தலங்களை வழிபாடு செய்துகொண்டு சிதம்பரத்தை அடைந்து சிலநாள் தொடர்ந்து வழிபாடு செய்து வருங்கால் கொற்றவன் குடியில் உமாபதி சிவாச்சாரியரையும், (சிங்காரத்தோப்பு) திருக்களாஞ்சேரியில் மறைஞான சம்பந்தரையும் வணங்கித் திருப்பாதிரிப்புலியூரை அடைந்தனர். அங்கெழுந்தருளியுள்ள பாடலீஸ்வரர் திருநாவுக்கரசரைக் கடலினின்றும் கரையேற்றிய காரணத்தால் அவ் இடத்திற்குக் கரையேறவிட்டகுப்பம் எனவும் தமக்குக் கரையேறவிட்ட முதல்வர் எனவும் வழங்கப்பெறும் ஆங்கே செல்வரொருவர் பொற்கிழி ஒன்றைப் புலவரவையிற் காட்டிக் ‘கறையேற விட்டமுதல் வாஉன்னை அன்றியுமோர் கதியுண்டாமோ’ என்னும் ஈற்றடிச் செய்யுளைப் பாடிமுற்றுவிப்போர்க்கு இது பரிசில் ஆகும் என்றனர். பாடிப் பரிசில் பெறாது பொற்கிழி கிடந்த அந்நிலையில் அந்தணரொருவர் தம் முறையீட்டைக்  கேட்டு அங்கெய்திய சிவஞான முனிவரர்

“வரையேற விட்டமுதஞ் சேந்தனிட
        வுண்டனைவல் லினமென் றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ
        எனைச்சித்தென் றுரைக்கில் என்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக்
        கொண்டுநறும் புலிசை மேவும்
கரையேற விட்டமுதல் வாவுன்னை
       அன்றியும்ஓர் கதியுண் டாமோ.”