Lix

ஈன்ற தாயார் பார்வதி யம்மை
பிள்ளை நாமம் பொன்னுச் சாமி
வித்தை தந்தோர் நாரா யணராம்
கற்ற நூலோ கணக்கி லில்லை
இல்லறத் துணைவி நற்பெருந் தேவி
ஈன்ற மக்களில் இன்னூல் தனக்கு
இன்னூரை தந்தவர் இனிய பண்பினர்
அன்னவர் தம்மொடு சுந்தர மம்மை
அருங்குணச் செல்வி ஆகிய இருவர்
அறுபத் திரண்டாம் அகவை தன்னில்
கைலைப் பரமன் வழிவழிப் போந்த
சைவம் வளர்க்குஞ் சீருடை யண்ணல்
பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்துத்
திருவுடைத் திருவார் சிவசண் முகமெனும்
மெய்ஞ்ஞா னச்சிவா சாரிய சுவாமிகள்
சிவமே யனையார் தம்மை யடைந்து
சைவத் தீக்கையுஞ் சைவசந் நியாசமும்
ஏற்றத் துறவினை எவ்விதத் தானும்
பழிப்பா ரின்றிப் பாங்குறத் தழுவி,
இயற்றிய நூல்கள் எடுத்துச் சொல்லின்
செங்குந் தர்புகழ் நுவல்நூற் கோவை,
செல்வ விநாயகர் சிறப்புப் பதிகம்
கச்சியே கம்பக் கடவுள் மாலை,
இன்னுஞ் சிலபல இன்னரும் நூற்கள்
சைவமுந் தமிழுந் தழைத்தினி தோங்கத்
தன்னுயி ரீந்துத் தகுவன செய்பவர்
என்னரும் மக்களும் இவர்தம் நட்பால்
ஏகாம் பரனார் இயற்பெயர் செல்வர்
நாற்பதிற் றிரட்டி நாலைக் கூட்டிய
அகவை தன்னை அடையப் பெற்றவர்
நட்புக் குகந்தவர் நயத்தகு பண்பினர்
இத்தகு புகழுடைப் புத்தகச் செல்வர்
காஞ்சிப் புராண உரைநூல் தன்னைத்
தமிழுல குக்குத் தந்திடத் துணிந்து
தன்துயர் சிறிதும் பொருட்படுத் தாது
பதிப்பித் துதவினர் பன்னாள் வாழ்வோர்
முருகக் கடவுளின் மறுபிறப்பெனத்தகு
செம்பொன் குமார சாமிக் கோவே!

861, தத்தோஜியப்பா சந்து,
தஞ்சாவூர்,
5-8-1963.

 இங்ஙனம்,
வீ. சொக்கலிங்கம்