Lviii
தஞ்சாவூர். அரண்மனை சரசுவதி மகால்,
தமிழ்த்துறை ஆராய்ச்சியாளர்,
வித்துவான் வீ. சொக்கலிங்கம் அவர்கள்
இயற்றிய சாற்றுக்கவி
திருவளர் தெய்வச் செழுமறைப் பெருமான்
கழகமோ டிருந்து கவினூற வாய்ந்த
தண்டமிழ் நாட்டின் தனிப்பெரு முதல்வர்
செறியிருள் விழுங்குஞ் செஞ்சுடர் போல,
நல்லோர் நயக்கும் நங்கயி லாய
வழிவழிப் போந்த வண்டமிழ் முனிவர்
ஆவடு தண்டுறை யாதீ னத்தின்
திருவினுந் திருவாய்த் திறமுறத் திகழ்ந்த
சிவனருள் ஞானம் சிறக்கப் பெற்றோர்,
சிவஞான முனிவர் எனப்பெயர் கொண்டோர்
கற்றோர் வியக்குங் காஞ்சிப் புராணம்
முற்றவுஞ் சுவைக்க மொழிந்தன ராக,
அத்தகு சிறப்புடை அரியதோர் நூலின்
ஈராயிரத்து எழுநூற் றோடு
நாற்பா னிரண்டு நாற்பா வினுக்குப்
பொழிப்புரை காண்டல் பொருத்தமென் றுணர்ந்து
திருமுறை சாத்திரம் தெளிவொடு கற்றோர்,
அடக்கம் ஆற்றல் அமையப் பெற்றோர்
தந்தை யிடத்துத் தமிழ்நூல் கற்றோர்
தனலக் குமியைத் தாரமாய்க் கொண்டோர்,
சண்முக மென்னுஞ் சொல்வன் மையினர்
தந்தைப் பணியினைத் தலைமேற் கொண்டு
சந்தத் தமிழிற் செய்தன ராக,
அன்னவர் தன்னை யத்தகு செயல்செய
ஏவிய செம்மல் காவியக் களஞ்சியம்,
காஞ்சிப் பதிவாழ் ஏகாம் பரனார்
நாமந் தன்னை மூச்சொடு பேச்சும்
தேனெனச் சொல்லிப் பாலெனப் பரவிடுந்
தொண்டை நாட்டுக் காஞ்சிப் பதிக்கு
அணித்தா யுள்ள ஐயன் குளத்தே
தலைமுறை யாகத் தமிழ்நூல் கற்ற
செங்குந் தகுலத் தனிக்குடி தழைக்க
உத்திரா டத்தே உதித்த செல்வர்
சொந்தத் தந்தை கந்த சாமி |
|