திங்கள்தோறும் திருமுறைமுற்றோதல்,
விரிவுரை நிகழ்த்தியும் ஆண்டு தோறும் குருபூசையைச்
சிறப்புற நடத்தியும் வருவது.
22. பெண்ணாகடத்தில் மெய்கண்டாருக்குக்
கோயில் எடுத்து ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற
நடத்துவது.
23. சித்தர் காட்டில் ஸ்ரீ
சிற்றம்பல நாடிகள் கோயில் திருப்பணி செய்து
கும்பாபிஷேகம் நிகழ்த்தி, சமயச்சொற்பொழிவு,
ஆண்டு தோறும் குருபூஜை நடத்தி வருவது.
24. சீகாழியில் திருமுலைப்பால்
விழாவிலும், திருவாமூரில் சதய விழாவிலும் திருமுறை
இசைவாணர்கட்குத் திருமுறைக் கலாநிதி பட்டம்
பொறித்த பொற்பதக்கமும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும்
வழங்கிவருவது.
25. ஆதீனச் சிறப்பு
விழாவாகிய ஆவணி மூல நாளில் பழுத்த தமிழ்ப்புலமை
பாலித்த தமிழறிஞர்க்குச் சிறப்புப் பட்டம் வழங்கி
வருவது.
26. சிதம்பரம் திருக்கோயிலில்
சமயாசாரியர்களோடு சந்தானா சாரியரைப் பிரதிட்டை
செய்வித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தியதுடன்
ஆண்டுதோறும் குருபூசை விழாக்களைக் கொண்டாடி
வருவது.
27. இல்லங்கள் தோறும் திருமுறை
முற்றோதல் செய்விப்பது.
28. சிவராத்திரி கார்த்திகைச்
சோமவாரம் போன்ற நாள்களில் அன்பர்கட்குச்
சமய விசேடதீட்சைகள் அளிப்பது.
29. மதுரையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ
குருஞான சம்பந்தர் திருமடத்தில் அவ்வப்போது
சமயச் சொற்பொழிவுகள் நடத்தி வருவது.
30. ஆதீன ஆலயங்களுக்கு மட்டும்
அன்றிப் பிற ஆலயங்களுக்கும் திருப்பணி நிதி உதவி
அளித்தல் - யாகசாலைச் செலவை ஏற்று நடத்துதல் முதலியன
செய்து வருவது.
31. திருநாரையூர்ப்
பொல்லாப் பிள்ளையார் கோயில் நம்பி ஆண்டார்
நம்பிகள் குருபூஜை விழாவை நடத்துவது.
|