வெளியிடுவது மிகமிகப் பொருத்தமே.இவ்வெளீயீடு இவரது அறுபதாண்டு நிறைவிழாவை ஒட்டி நிகழ்வது, மேலும் மகிழ்ச்சிக்குரியதாகின்றது. குருவருளை இனிது விளக்கும் சிவஞானபோதச் சூத்திரம் தெளி பொருள் உரை ஒன்றும் இவரால் இதற்கு முன்பு எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. எட்டாந்திருமுறை உரையை வெளியிடுகின்ற இவர், பத்தாந்திருமுறையாகிய திருமந்திரத்துக்கு உரை காண்பதில் இது பொழுது ஈடுபட்டுள்ளார். அதன் சிறு குறிப்புகள் நமது ‘ஞானசம்பந்தம்’ இதழிலும் திங்கள்தோறும் வெளி வருகின்றன.

இவ்வாறு சிவபூஜையிலும், சிவநெறித்தொண்டிலுமே ஈடுபட்டிருக்கும் இவரது திருவாசக உரை வெளியீட்டு விழா வெற்றியுற நிகழவும், முன்பு திருக்குறள் வேளாகி, இது போது திருவாசகச் செம்மலாகின்ற திரு. பிள்ளை அவர்கள், தம் சுற்றத்துடன் சிவநெறித் தொண்டு செய்து, இன்னும் பல்லாண்டுகள் நீடு வாழவும் எங்கள் செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை வேண்டுகின்றோம்.
 

 

"பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தே."