x

பெற்றதோடு,   பல  தலங்களிலும்  சென்று  பாடப்பட்ட வகையிலும்
தேவாரத்தோடு  ஒத்துநிற்கின்றது. அங்ஙனம் பாடப்பெற்ற தலங்களுள்
கோயில்  (தில்லை),  திருவீழிமிழலை திருவாவடுதுறை, திருப்பூவணம்,
திருவிடைமருதூர்,  திருவாரூர்  என்னும்  ஆறுமே  தேவாரம் பெற்ற
தலங்கள்.   ஏனைய   திருவிசைப்பா  மட்டுமே  பெற்றவை.  அவை,
திருவிடைக்கழி,  திருக்களந்தை  ஆதித்தேச்சரம். திருக்கீழ்க்கோட்டூர்
மணியம்பலம்,     திருமுகத்தலை,     திரைலோக்கிய     சுந்தரம்,
கங்கைகொண்ட     சோளேச்சரம்,    திருச்சாட்டியக்குடி,   தஞ்சை
இராசராசேச்சரம் என்பன.

இவற்றுள்   கோயில்பற்றிய  திருவிசைப்பாக்களே  பெரும்பாலன.
திருப்பல்லாண்டும் கோயில்பற்றியதே.  

திருவிசைப்பாவின்  பண்களில் சாளரபாணி’ என்பது ஒன்று தவிர
ஏனைய   எல்லாப்  பண்களும்   தேவாரத்தில்   உள்ள  பண்களே
‘சாளரபாணி’  என்பது ஒன்றுமட்டும்  இவ்வொன்பதாந் திருமுறையுள்
புதுவதாய்க் காணப்படுகின்றது. ஏனைய பண்களிலும் ‘பஞ்சமம்’ என்ற
பண்ணில் அமைந்த திருப்பதிகங்களே பெரும்பான்மை.  

முன்னைத்   திருமுறைகள் போல  இவ்வொன்பதாந் திருமுறையும்
சிவபிரானது  திருமேனிச்  சிறப்பையும்,  அவன் தேவர்  பொருட்டும்,
அடியவர்   பொருட்டும்   அவ்வப்பொழுது   மேற்கொண்ட  அருட்
செயல்களையும்   பல்காலும்   எடுத்தோதிப்  பரவுதலோடு,  தத்துவக்
கருத்துக்களை  இலைமறை காய்போல அரிதின் விளங்கும் முறையிலே
கொண்டு,  முன்னை  அருளாசிரியர்  பெருமைகளை  எடுத்தோதுவது,
முருகக்  கடவுளைப்  பற்றிய  ஒரு  திருப்பதிகம்  இத்  திருமுறையிற்
காணப்படுவது  இதன் தனித்தன்மை எனலாம். இதன் வழியில் நின்றே
பதினொன்றாந்  திருமுறையுள் சிவபிரானைப்பற்றிய பிரபந்தங்களோடு
விநாயகர்  முருகக்கடவுள் இவர்களைப்பற்றிய பிரபந்தங்களும்,  சிவன்
அடியார்களைப்பற்றிய பிரபந்தங்களும் உடன் தொகுக்கப்பட்டன.  

இத்தகைய     சிறப்பமைந்த   இவ்வொன்பதாந்   திருமுறையும்,
முன்னைத்   திருமுறைகள்  போலக்  குறிப்புரையுடன்  வெளிவருதல்
வேண்டும் எனத் தருமையாதீனம் 25 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய