தேவாரப்
பாடல் பெற்ற தலங்களைப் பற்றிப் பல பெரியார்கள் பல
வரலாறுகள் வெளியிட்டுள்ளார்கள். நாயன்மார்களது அவதாரத் தலங்களில்
அவற்றுள் அடங்காதவற்றிற்கு அதுபோல வரலாறு, சென்றடையும் வழி
முதலிய விவரங்கள் இதுவரை ஒருவரும் தொகுத்து வெளியிடாதது ஒரு
பெருங்குறையேயாம். இதனால் பல தலங்கள் இருக்குமிடமும்
தெரியக்கூடவில்லை. சில தலங்கள் ஒன்றோடொன்று மயங்கி
யறியப்படுகின்றன. ஒரே பேராற் பல தலங்கள் காணப்படுகின்றன. அங்கங்கு
நேரிற் சென்று கண்டும், அறிந்தோரைக்கேட்டும், தலவழக்குக்கள்,
தலசரிதங்கள், கல்வெட்டுக்கள் முதலிய பலவும் ஆராய்ந்தும் இத்தலங்களை
நிச்சயிக்கவேண்டிய யிருக்கின்றது. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
மரபினரும், நாயன்மார் தலங்களுக்குச் சென்று சென்று தரிசித்தவரும்,
நாயன்மார்களிடத்துப் பேரன்பு கொண்டு கலித்துறையந்தாதி முதலியவற்றை
அனுபவித்துப் பாராயணஞ் செய்வோருமாகிய தஞ்சாவூர் முத்து என்பவர்
தந்த தலக் குறிப்புக்கள் எனக்குப் பெருந்துணை செய்தன. மாற நாயனாரது>
இளையான்குடி சோழநாட்டுத் (தஞ்சை சில்லா) திருநள்ளாற்றினை
யடுத்துள்ள தலமா? அல்லது பாண்டி நாட்டு (இராமநாதபுரம் சில்லாப்)
பரமக்குடியை அடுத்துள்ள தலமா? என்பது இன்னும் ஐயப்பாடேயாய் நிற்பது.
நாயன்மார் தலக்குறிப்புக்கள் பலவற்றையும், பலவாறு முயன்று சேகரித்த
மற்றும் பல பொருள்களையும் அங்கங்குக் குறித்துள்ளேன். ஆங்காங்குப்
பொருந்திய தேவாரக் குறிப்புக்களும் அறிந்த வரை தந்துள்ளேன்.
மேற்கோள்களைப் பெரும்பாலும் சைவத் தெய்வப் பன்னிரு திருமுறைகள் -
பதினான்கு சாத்திரங்கள் - திருக்குறள் - கந்தபுராணம் - திருவிளையாடற்
புராணமாதி சைவ புராணங்கள் முதலிய சைவப் பெருநூல்களிலிருந்தே
தந்துள்ளேன். வேதத்திற்கு வேதமே பிரமாரணம். இந்நூற்கருத்தைப் பொருந்த
விளக்குவன தமிழ் வேதமே என்பது எனது துணிபு. வேறு நூற்களின்
மேற்கோள்கள் சிறுபான்மையேயாம். இதுபற்றி அறிவோர் குறைகூறார் என்று
நம்புகின்றேன்.
கற்பனை
என்ற தலைப்பின்கீழ் அவ்வப் புராணங்களினின்றும் நாம்
அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளாக என் சிறிய அறிவுட்பட்ட
குறிப்புக்களைக் குறித்துள்ளேன். அவை அவ்வப்புராணங்களில்
ஆராய்ச்சியைத் தூண்டி மக்களை நல்வழிப்படுத்துமென்று நம்புகின்றேன்.
உரைக்குறிப்புக்களில் எனக்குக் கிடைத்துள்ள அச்சிட்ட உரைப்பகுதிகளிற்
கண்ட பொருள்களை சில அரிய இடங்களிற் பேர் குறித்தும், சில இடங்களிற்
பேர் குறியாமலும் பயன்படுத்திக்கொண்டேன். அவைபற்றி அவ்வவ்வுரைகளின்
உரிமையுடையோர்பால் மன்னிப்புக் கேட்கின்றேன். அவர்கள் தமது
பெருமையினால் என்மீது சினங்கொள்ளார்கள் என்பது எனது துணிபு. அச்சில்
வாராத பல பெரியார்களது உரைக்குறிப்புக்களும் எனக்குப் பேருதவி
புரிந்தன. அவற்றுட் சிறந்த திரு. இராமநாத செட்டியாரது
உரைக்குறிப்புக்களைப்பற்றி முன்னரே குறித்தேன். அதனினும் மிகச்
சிறந்தனவாய், நான் உடனிருந்து கேட்டுக் குறித்தனவாய் எனக்கு
ஊன்றுகோல்போல மிக உதவி வருவன சைவப் பெரியார் ஸ்ரீ. க. சாதாசிவ
செட்டியாரவர்களது உரைக்குறிப்புக்களேயாம். இவற்றின் வரலாறும் முன்னரே
குறித்துள்ளேன். இவ்வாறு பலவிடத்துக் கண்டவையும் கேட்டவையுமாயுள்ள
குறிப்புக்களே இப்பதிப்பிற் காண்பனவாம். ஆதலின் இதனை அடியேன்
தொகுத்தியற்றிய உரையென்றே முகப்புத்தாளிற்
பொறித்துள்ளேன்.
"இதில்
உனது சொந்தம் ஏதேனும் உண்டோ?" என வினவுவீராயின்,
உண்டு - என்பேன். ஆனால் அவற்றைப் பிரித்துக் காண்பது மிக எளிது.
பெரியோர் கண்டுகொள்வர். இவ்வெளியீட்டிற் காணும் குறையும், மிகையும்,
பிழையும், என்றிவைகளெல்லாம் என்னுடைய சொந்தப் பொருள்களேயாம்.
உரைத்தொகுப்பிலே பாட்டுக் கடினமாய்க் கொண்டு கூட்டி
உரைக்கற்பாலதாய்க் காணுமிடத்துப் பதவுரையாகவும் ஏனை எல்லா இடத்தும்
பொழிப்புரையாகவும்பொருள்
|