82

  முத்திநெறி காட்டு முதல்வர் முழுதுணர்ந்தோர்
பித்தனுறை யாரூர்ப் பிறந்தார்க - ளத்தனையே
முப்போதுந் தீண்டுவார் முழுநீறு பூசுவா
ரப்பாலு மீச னடிச்சார்ந்தார் - மெய்ப்பூசன்
   
35 மானியார் நேசனார் வாழ்செங்கட் சோழனார்
பான்மையார் நீலகண்டப் பரணனார் -
                    மேன்மைச்
சடையரிசை ஞானியிவர் தம்மையெல்லாஞ்
                     சேர்த்துத்
தொடையாகப் பாடியவன் றொண்ட -
                  ரடியிணைகள்
சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவைதனை
   
40 மந்திரமாக் கொண்டு மயிர்சிலிர்த்து -                     நைந்துருகி
மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்
கைதவமும் புல்லறிவுங் கற்பனையு -                  மையலுந்தீர்ந்
தத்துவவிதா னந்த வகண்டபரி பூரணத்தி
னித்தியமா வாழ்வார் நிசம்.

திருத்தொண்டர் திருநாமக்கோவை முற்றிற்று
திருச்சிற்றம்பலம்

திருநாமக்கோவையின் உரைக் குறிப்புக்கள்

1. சீர் நீலகண்டனார் - சீர் - சிறப்பு - சீர்த்தி. அயலறியாத வண்ணம்
அண்ணலாராணை காத்துப், பெருந்தேவர்களுங் கடத்தற்கரிய காமத்தை
வென்ற சிறப்புக் குறிக்கச் சீர் எனறார். மயலில் சீர்த்தொண்டனார் - என்ற
பெரியபுராண ஆட்சி போற்றப்பட்டது காண்க.

2. இல்லை அளித்த - அடியார் வேண்டிய தெதுவாயினும் இல்லை
என்று சொல்லாமற் கொடுத்த. “இல்லையே யென்னாத“ என்ற
திருத்தொண்டத் தொகையும், அதற்கு, “மறைச்சிலம்படியார், மிக்க சீரடி
யார்கள்யா ரேனும் வேண்டும் யாவையும் இல்லையென் னாதே, இக்கடற்படி
நிகழமுன் கொடுக்குமியல்பு“ என்ற பெரியபுராணவுரையும் இங்குச் சுருக்கிக்
காட்டிய அழகு காண்க. என்னாது என்பது தொக்கு நின்றது. இனி,
இல்லை - இல் - மனைவி என்று கொண்டு, இல்லை அளித்த -
மனைவியை அளித்த என்று பொருள் கொள்ளின், இல்லை என்ற விதப்பு,
நாடுறு பழியு மொன்னார் நகையையு நாணாது “உன்றன்மனைவியைப்
பனவற் கீந்தோ பாடவ முரைப்பது - கொடுக்கயா மொட்டோம்“ என்ற
பாசத்தார் கட்டினை யறுத்துச், செய்வதற்கரிய செய்கையாகிய
களத்திரபாச நீக்கின தீரங் குறித்தது. இல்லையளித்த என்ற ஒரு
சொற்றொடரானே நாயனாரது பண்பும், சரிதமுங் குறிக்கவைத்த பேரழகு
காண்க.

3.தொல்லை - தொன்மையும் வாய்மையும் சிறந்த வேளாண்
குலத்தின் குடிப்பண்பு குறித்தது. வறுமை, பசி முதலிய எந்தத் தொல்லை
வரினும் இளையாது அடியாரைப் பேணியவர் என்ற குறிப்பும் காண்க.

4.என்றும் இளையா விறன்மிண்டர் - திருக்கூட்டம் பேணாது
செல்லும் நம்பியாரூரரும் புறகு; அவரையாண்ட பிரானாகிய திருவாரூரரும்
புறகு - என்ற வன்மையும், புவியெங்கும் சென்று ஆளுடையா ரடியவர்தந்
திண்மை யொழுக்க நடை செலுத்திய இவரது வீரமுஞ், சலியாமையும்
குறித்து என்றும் இளையா என்றார்.

5. இன்பம் அளவும் அமர்நீதி - திருவிழாச் சேவித்தலும்,
அடியார்க்முதளித்தலும் என்ற, மண்ணினிற் பிறந்தார் பெறும்
பயனிரண்டினையும் பெற்று,