II

கோவை - சிவக்கவிமணி - சைவத்திரு - C.K. சுப்பிரமண்ய முதலியார் அவர்கள்
ஆச்சார்யாள்புரத்தில்
ஸ்ரீ ஞானசம்பந்த மூர்த்திகள் புராணவுரைப் பதிப்பு நிறைவு விழாவில்
அன்புமிக்குப் பாடிய

வாழ்த்துப்பாமாலை

உலகமெலா மின்போங்கி யிடர்நீங்கி யுயர்ந்துதிகழ்ந் துவக்க முன்னாட்
பலகவிக்கு மிலக்கணமாப் பாக்கியச்சேக் கிழாரருளும் பன்னி ரண்டா
யிலகருளின் வடிவான திருமுறைக்குப் பேருரையை யியற்றி நம்மை
மலகரும் மாறைகடந் துலவருளி னுறையவைத்த வல்லல் வாழ்க.

(1)

சேக்கிழார் கோத்திரத்துச் செழுந்தமிழ்ப்பா வலனாமுற் சிறந்து நின்றோன்
சேக்கிழான் மலரடிக்கே சிந்தனையை யிடமாக்கித் திருவைப் பெற்றோன்
சேக்கிழா ரிவ்விருப தாநூற்றாண் டினிலிருக்கச் சேயா வந்தே
சேக்கிழார் பெயருளநா ளெலாம்விளங்குங் கவிமணியாஞ் சிவனே வாழ்க

(2)

பெரியவுரா ணம்வடிவாற் பெரியபுரா ணம்மெனயாம் பேணிப் போற்றிப்
பிரியபுகன் றுவக்கவுரை பதினையாண் டாவெழுதிப் பிறங்கச் செய்து
கரியமல மறுவித்துக் கருணையுருப் பெருமான்சீர்க் கழலின் போங்க
உரியபரம் பரைக்கொடையை யுலகுபெற வருள்வள்ளா லுவந்து வாழ்க.

(3)

பண்டுதிருச் சிற்றம் பலப்புலவர் போதனையும் பாக்க ளைக்கற்
கண்டுநிக ராப்பாடுங் சந்தசா மிப்புலவர் கருணை நோன்பும்
தொண்டுசிவ னடிக்காற்றுந் தமிழ்ச்சைவர் பழந்தவமும் தொடர்பு கொண்டுள்
வண்டுரியா தீ தப்பே ரானந்த மொடுவடிவாய் வந்தாய் வாழ்க.

(4)

பாவலனே வாழ்கசிவ பத்திமையாய் வாழ்கதமிழ்ப் பண்பு மிக்க
நாவலனே வாழ்கவுல காவலனே வாழ்கபேயர் நாடத் தோற்றுஞ்
சேவலனே வாழ்கவுரை செய்வகையா லழைக்குமிடஞ் சென்று நோக்கும்
பூவலனே வாழ்கநினைப் போல்வாரார்? புலனடக்கும் புலவா வாழ்க.

(5)

புவிநாடும் புகழ்வளர்ந்து புலவோர்சென் னெறிவிளக்கிப் புநித வாழ்வை
யவிநாடும் வானோர்க்கும் அரியதென வுலகவர்க்கிங் களித்த வள்ளால்
அவிநாசிக் கருணாம்பா மலரடிக்குத் தமிழ்மாலை யணிந்த சீரா
கவிநாடும் பெயர்ச்சுப்ர மண்யனெனும் முதலோனே கவின்று வாழ்க.

(6)

தில்லைநகர்ப் பொன்மன்றிற் பெரியபுரா ணத்திருநூல் செம்மை யோர்வார்
எல்லையிலா திருக்கவரங் கேற்றியதொல் பெருங்காட்சி யிந்நாள் யார்க்கும்
சொல்லைவெலக் கிடைக்குமுயர் தவப்பயனைச் சிவனருளாற் றொடர்ந்து
வாய்க்க
நல்லைநின தரியபெருஞ் செயலன்றோ காரணம்? மெய்ஞ் ஞானி வாழ்க.

(7)

ஆண்டுதொறும் பெருங்கோவைத் தமிழ்ச்சங்கத் தெழிலகத்தே ஆசான் பூசை
வேண்டுவகை புராணவர லாற்றுவிரி வுரையோடு மேவி யாற்றிப்