வாழ்த்து
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.