பாராயணம்பண்ணி அவைகளைப் பொருள்படுத்தவுங் கற்றிருந்தார்.
இலக்கண அறிவு தமக்குச் சொற்பம் என்பதை அறிந்த பண்டிதர்
தம்மினும் மிக்க இலக்கண அறிவு வாய்ந்த மாணிக்கவாசகத்
தேவர் என்னும் புலவரை அமர்த்தி அவரைக்கொண்டு தம்
புத்திரர்களுக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தார். கிருஷ்ணனுக்கு
இங்கிலீஷ் பாஷையை கற்பிக்கவேண்டும் என்னும் ஆசை
தகப்பனுக்கு இருந்தும், தங்களை விட்டுப் பிரித்து அவரை
தூரத்திலுள்ள ஆங்கில கல்விச் சாலைக்கு அனுப்பப்
பெற்றோருக்குப் பிரியமில்லை. ஆயினும் ஆங்கிலத்துக்குப்
பதிலாக அவருக்கு பிலவண ஜோசியர் என்னும் பிராமணோத்த
மரைக்கொண்டு சமஸ்கிருத பாஷையைக் கற்றுக்கொடுத்தனர்.

1842ஆம் வருடம் கிருஷ்ணபிள்ளைக்கு விவாகமானது. தமது
தந்தை மரணமடைந்தபின் தமக்குக் கிடைத்த திரவியத்தைக்
கொண்டு தமது கல்வியறிவை அபிவிர்த்திசெய்ய முயன்றனர்.
அக்காலத்தில் தமிழ் நாட்டில் பிரபல புலவராக இருந்த மஹா
வித்வான் திருப்பாற் கடனாதக் கவிராயரை யடுத்து, அவரிடம்
கிருஷ்ணன் முத்தையா என்னும் இவ்விருவரும் யாப்பு முதலிய
இலக்கண நூல்களை கற்றனர். இதன்றி, இவ்விரு சகோதரரும்
தம் உடன் மாணாக்கராகிய ஷண்முகநாதக் கவிராயருமாக
மூவரும் ஒருங்குகூடித் தத்தம் முயற்சியால் இலக்கண
இலக்கியங்களைக் கற்றுத் தேறினர். தமது தகப்பனார் தேக
வியோகமானபின், கிருஷ்ணபிள்ளை வைஷ்ணவ மதத்தில் அதிக
வைராக்கியங் காண்பித்தார். அக்காலத்தில் திருநெல்வேலி
நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் அதிக மும்முரமாய் நடந்தேறியது.
பரசமயமாகிய கிறிஸ்துமதம் தீவிரகதியாய்த் தென்னாட்டில்
அபிவிர்த்தியாவதைக் கண்ட கிருஷ்ணபிள்ளை கிறிஸ்துமதத்துக்கு
விரோதமாய் தீங்கிழைத்துவந்த சில கூட்டத்தாரோடு
சேர்ந்துகொண்டு தமது பந்துக்களில் சிலரோடும் சில
மறவர்களோடும்கூடி, நல்லூர் என்னும் கிராமத்திலிருந்த
கிறிஸ்தவர்களை அடித்து இம்சைப்படுத்தினார். இவரோடிருந்த
மறவர்கள் கிறிஸ்தவர்களுடைய வீட்டைக் கொள்ளையடித்தனர்.
இச்செய்தி கலக்டருடைய காதிற் கொட்டியவுடன் அவர்
கலகக்காரரைப் பிடித்துவரும்படி வாரண்டு பிறப்பித்தார்.
கிருஷ்ணபிள்ளையின் மாமன் முதலிய பந்துக்களும் பல
மறவர்களும் கைதுசெய்யப்பட்டு தண்டனையடைந்தனர்.
கிருஷ்ணபிள்ளைமட்டும் கைதுசெய்யப்படவில்லை.
இவ்விஷயத்தை இன்றைய வரைக்கும் ஞாபகப்படுத்தக்கூடிய
ஒரு காரியம் இருக்கிறது. மறவர்கள் கிறிஸ்தவர்களிடத்தினின்று
கொள்ளையடித் தபகரித்த உப்பு மூட்டைகளை போலீஸ்
உத்தியோகஸ்தர் கண்டு பிடித்துக்கொள்ளுவார்கள் என்று பயந்து,
கிருஷ்ணபிள்ளை இருந்த வீட்டின் முற்றத்துக் கிணற்றில்
கொட்டிவிட்டனர். அக்காலத்தில் நல்ல ஜலமாயிருந்த இக்கிணறு
இப்போது உப்பு ஜலமாயிருக்கிறது. சென்னை ஹைக்கோர்ட்
ஜட்ஜ்களில் ஒருவரும் கிருஷ்ணபிள்ளையின் நெருங்கிய
பந்துவுமான ஜஸ்டிஸ் தேவதாஸ் அவர்கள் தாம் நல்லூருக்குச்
சென்று இந்தக் கிணற்று ஜலத்தை சோதித்துப் பார்த்து அது
இன்னும் உப்புக் கைக்கிறதாக கூறியிருக்கின்றார்.

கிருஷ்ணபிள்ளையும் அவர் சகோதரர் முத்தையாபிள்ளையும்
இவ்வாறு பரசமய கண்டனம் நடத்தி, வைஷ்ணவ சமய
வழிபாட்டில் ஊக்கங்காட்டி,